தன்னம்பிக்கை

திருப்பூர் வாசகர்வட்டம்
நாள்	:	13.05.2012 ஞாயிற்றுக்கிழமை

நேரம்	:	காலை 10 மணி

இடம்	:	அரிமா சங்க அரங்கம்

குமரன் ரோடு

திருப்பூர்

தலைப்பு	:	“மனிதப் பிறவியும் மகாத்மியம்”

சிறப்பு பயிற்சியாளர்: திரு. டி.ஆர். வெங்கடராமன்

மனவளப் பயிற்சியாளர், திருச்சி, 96004 86329

தொடர்புக்கு	:	திரு. மகாதேவன் – 94420 04254

திரு. வடிவேல் – 99944 27992

திரு. வெங்கடேஸ்வரன் – 94423 74220

திரு. கிருஷ்ணமூர்த்தி – 99761 10974

சென்னை வாசகர் வட்டம்
நாள்	:	13.5.2012, ஞாயிற்றுக்கிழமை

நேரம்	:	காலை 10.00 மணி

இல்ம்	:	P.S. மேல்நிலைப்பள்ளி

இராமகிருஷ்ணா மடம் ரோடு

இராமகிருஷ்ணா மடம் எதிரில்

மைலாப்பூர், சென்னை – 600 004

தலைப்பு	:	“வெற்றியின் மொழி”

சிறப்பு பயிற்சியாளர் : திரு. ஜி. ராமசுப்பிரமணியன், B.E., MBA மனநல ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர், 94441 28486

தொடர்புக்கு தலைவர்: M.S.M. சோமசுந்தரம் மாணிக்கம்

செயலாளர் : L. கருணாகரன் – 98419 71170

பொருளாளர் : A. கஅறிவழகன் – 97906 31378

PRO – M.P.. சரவணன் 98841 60404

திருச்சி வாசகர் வட்டம்
நாள்	:	13.5.2012; ஞாயிற்றுக்கிழமை

நேரம்	:	காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

இடம்	: 	பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளி,

தெப்பக்குளம்,

சென்னை சில்க்ஸ் எதிரில்,

திருச்சி.

தலைப்பு		: 	“வாழ்வியல் மேலாண்மை’

சிறப்பு பயிற்சியாளர் : திரு. மனுராஜ், M.E.					        சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்			 		திருச்சி

தொடர்புக்கு :

திரு. கே. நாகராஜன் 94437 14933

திரு. தங்கவேல் மாரிமுத்து 93603 27848

திரு. சுரேந்திரன் 98940 93595

திருச்செங்கோடு வாசகர்வட்டம்
நாள்	:	13.5.2012, ஞாயிற்றுக்கிழமை

நேரம்	:	மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை

இடம்	:	ஹோட்டல் சித்தார்த்தா ஹால்

ஜோதி சினிமா தியேட்டர் அருகில்,

திருச்செங்கோடு

தலைப்பு	:	“உன்னையறிந்தால்”

சிறப்பு பயிற்சியாளர் : டாக்டர் வி.ஆர். அறிவழகன் ஆசிரியர் ஆனந்தயோகம்-கலைக்கதிர், கோவை, 934482805

தொடர்புக்கு தலைவர்: JCI. Sen.  G.  கோவிந்தசாமி 9842796868

செயலாளர் : Jc.  அ. திருநாவுக்கரசு 99429 66554

ஒருங்கிணைப்பாளர் : Jc. Dr. P. சரவணன் 9842796868

மதுரை வாசகர் வட்டம்
நாள் 	:	20.5.2012; ஞாயிற்றுக்கிழமை

நேரம்	:	காலை 10.30 மணி

இடம்	: 	தன்னம்பிக்கை பயிற்சி மையம்,

42 / 20, சிபி பவுண்டேசன்,

மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர்

தபால்தந்தி நகர் ரோடு,

பிரம்மகுமாரிகள் மடம் எதிர்புறம்

மதுரை -17.

தலைப்பு		:	“தன்னம்பிக்கைக்கு தூண்டுகோள் ஊக்கம்”

சிறப்புப் பயிற்சியாளர் : திரு. நிஷாந்த்,M.A., M.Phil.

உதவிப் பேராசிரியர்

மதுரை சமூக அறிவியல் கல்லூரி

தொடர்புக்கு

தலைவர் – திரு. எ. எஸ். இராஜராஜன்: 9442267647

செயலர் – கவிஞர். இரா. இரவி: 98421 93103

ஒருங்கிணைப்பாளர் – திரு. திருச்சி சந்தர்: 9443743524

கோவை வாசகர் வட்டம்
நாள் 	:	20.5.2012; ஞாயிற்றுக்கிழமை

நேரம்	: 	காலை 10.00 மணி

இடம்	:	இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட்,

139/86, மேற்கு சம்பந்தம் சாலை,

ஆர்.எஸ். புரம் (மேற்கு),

பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்,

கோவை.

தலைப்பு		:	“வெற்றியின் வேர்”

சிறப்புப் பயிற்சியாளர் : திரு. நம்பிக்கை மணியன் சுயமுன்னேற்ற பயிற்சியாளர்,

தூத்துக்குடி, போன்: 9842591086

தொடர்புக்கு:

தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் – 98422 59335

செயலாளர் திரு. A. சரவணகுமரன் – 9092092080

PRO  திரு. விக்டரி விஸ்வநாதன்  9787744533

ஈரோடு வாசகர்வட்டம்
நாள்	:	27.5.2012, ஞாயிற்றுக்கிழமை

நேரம்	:	மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை

இடம்	:	மாயா பஜார் A/C ஹால்,

Opp. E.B. அலுவலகம் எதிரில்,

E.V.N.ரோடு, ஈரோடு.

தலைப்பு	:	“மனிதப் பிறவியும் மகாத்மியம்”

சிறப்பு பயிற்சியாளர்: திரு. டி.ஆர். வெங்கடராமன்

மனவளப் பயிற்சியாளர், திருச்சி, 96004 86329

தொடர்புக்கு

தலைவர் Jc. A. குப்புசாமி  – 98432 69931

செயலாளர் Jc.. நூர்முகம்மது – 99945 00575

பொருளாளர் Jc. S. சையது ஜைனலாபுதீன் – 99942 29080

உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !!
நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை, சிறந்த தலைமுறையை உருவாக்கும் பொருட்டு ஆரவாரம் இல்லாமல் அடுத்தடுத்து, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, ரத்தினம் மேலாண்மை கல்லூரி, ரத்தினம் பொறியியல் கல்லூரி, ரத்தினம் இன்டர்நேசனல் பப்ளிக் ஸ்கூல் என்று கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிப்பை அளித்துக்கொண்டிருப்பவர்,

புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப மாணவர்களைத் தயார் செய்யும் நோக்குடன் தகவல் தொழில்நுட்ப பூங்காவையும், சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் நிறுவி, கல்வி நிறுவனத்துடன் தொழில் நிறுவனங்களும் ஒருங்கிணைந்த வளாகத்தை ஏற்படுத்தி சிறப்பான முறையில் செயல்படுத்திக்கொண்டிருப்பவர்,

இப்படி பன்முகத்தன்மையும், சிறந்த ஆளுமையும் கொண்ட ரத்தினம் கல்வி நிறுவனங்களின் சேர்மன் டாக்டர் மதன் ஆ. செந்தில் அவர்கள், வாழ்வின் அடித்தளத்திலிருந்து ஆரம்பித்து, ஆரவாரம் இல்லாமல் எப்படி இத்தனை சாதனைகள் செய்தார்? அவர் வெற்றியின் ரகசியம் என்ன? கடுமையான உழைப்பா? மேலாண்மைத் திறனா? தொழில் நுட்ப அறிவா? எது என்பதை தன்னம்பிக்கை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அவருடனான இந்த சந்திப்பில் குடும்பம், கல்லூரி, தொழில் நிறுவனம், எதிர்கால இலக்கு, சமுதாயத்தின் மீது அவருக்குள்ள பார்வை, கல்வி முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள், இளைய தலைமுறை மீதுள்ளஅக்கறை குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவருடனான சந்திப்பிலிருந்து…

தன்னம்பிக்கை : உங்களைப் பற்றி…

மதன் ஆ. செந்தில் : நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கோவையில் தான். அப்பா திரு. ஆறுமுகம் சி.ஐ.டி. கல்லூரியில் பணியாற்றியவர். அம்மா திருமதி. நாகரத்தினம் கே.பி.எம். என்றபள்ளியை நடத்திக் கொண்டிருந்தவர். நான் பத்தாம் வகுப்பு வரை கே.பி.எம். பள்ளியில் தான் படித்தேன். பின்னர் நேரு வித்யாலயாவில் 12ம் வகுப்பை முடித்தேன். பள்ளியில் படிக்கும் போது படிப்பில் எப்போதும் சராசரி மாணவனாகத் தான் இருந்தேன்.

பள்ளிக் கல்வியை முடித்த பிறகு என்ன படிக்கலாம் என்று நினைத்தபோது அப்பாவின் வழிகாட்டுதலின் படி சி.ஐ.டி. கல்லூரியில் இன்ஜினியரிங் சேர்ந்து படித்தேன். கல்லூரியிலும் நான் சராசரி மாணவனாகத் தான் தேர்வு பெற்றேன். படிப்பில் நான் சராசரி மாணவனாக இருந்தாலும் என்னுடைய கூர்மையான அறிவால் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஸ்டில் கேமராவையும் 11ம் வகுப்பு படிக்கும் போது புரஜக்டரும் தயாரித்தேன். இப்படி என்னுடைய நுண்ணிய அறிவியல் அறிவின் ஆற்றலைத் திறம்படப் பயன்படுத்த ஆரம்பித்த நான் இன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் போதே தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி ‘வாசிங் மெசின் டைமர்’, ‘வாட்டர் லெவல்’  கன்ட்ரோலைத் தயாரித்து விற்பனை செய்து வந்தேன்.

ஓராண்டிற்குப் பிறகு உயர் கல்விக்காக அமெரிக்காவிற்குச் சென்று எம்.எஸ். படித்தேன். இந்தியாவில் சராசரி மாணவனாக இருந்த நான் அமெரிக்காவின் முற்றிலும் மாறுபட்ட பாட அமைப்பு முறையில் வகுப்பு முதல்வனாக (Class Topper) வளர்ந்தேன். என்னுடைய ஆராய்ச்சி ஆர்வத்திற்கு தகுந்த மாதிரியான பாடத்திட்டத்தால் இது சாத்தியமானது. எம்.எஸ். முடித்தவுடன் அமெரிக்காவிலேயே மோட்டரோலா (Motorola) நிறுவனத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றினேன்.

தன்னம்பிக்கை : தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனம் இணைந்த வளாக முறை கோவையில் புதியது.  இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி உருவானது?

மதன் ஆ. செந்தில் : தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனம் இணைந்த வளாக முறையில் உருவான ஒரு நிறுவனமான பிட்ஸ் பெர்க்கில் உள்ள கார்னிமெலன் பல்கலைக்கழகத்தில் பணிசெய்து கொண்டிருந்த போது அங்கு செய்த ஆராய்ச்சியின் விளைவால் உருவானது ‘டைம்சிஸ்’ என்ற நிறுவனம். இந்தியாவில் அத்தகைய முறையிலான நிறுவனத்தை உருவாக்குவதற்காக 2000 வருடத்தின் இறுதியில் இந்தியா திரும்பினேன். கோவையில் பி.எஸ்.ஜி.யிலும், பெங்களூரிலும் ‘டைம் சிஸ்’ என்ற பெயரில் கார்னிமெலனுக்காக நிறுவனங்களைத் துவங்கினேன். அதே நேரத்தில் ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியையும், 2001ம் ஆண்டு துவக்கினேன். அந்த கார்னிமெலனின் தாக்கத்தால் எங்களின் கல்வி நிறுவனம் அமைந்துள்ள அதே வளாகத்தில் தொழில் நிறுவனங்களையும் நிறுவி கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்தேன்.

தன்னம்பிக்கை : இந்தியாவின் கல்விமுறைக்கும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளின் கல்விமுறைக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து….

மதன் ஆ. செந்தில் : கல்வியில் இரண்டு வகை உண்டு. ஒன்று தெரிந்து கொள்வதற்கான கல்வி. மற்றொன்று சிந்தித்துச் செயல்படுவதற்கான கல்வி. இந்தியாவில் முதல்வகையான கல்வி மட்டுமே போதிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் இரண்டாம் வகைக் கல்வி நடைமுறையில் உள்ளது. நான் அமெரிக்கா சென்ற போது அத்தகைய கல்வி முறை உருவாகி இருந்ததால் தான் என்னால் முதன்மை பெற முடிந்தது.

பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளுமே திறமையானவர்களாகவே  இருக்கிறார்கள். முறையான ஊக்கம் கிடைக்காமலேயே சுய மதிப்பு அறியாமல் தடுமாறுபவர்களாக இந்தியாவில் இருக்கிறார்கள். பட்டப்படிப்பு முடித்தும் தன்னம்பிக்கையிலந்த மாணவர்கள் நம் நாட்டில் ஏராளம். இன்று நமக்குக் கல்வி எட்டாக் கனியல்ல. பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் கல்வியைக் கற்றுத் தருகிறார்கள். அதைத் தாண்டி தன்னம்பிக்கையையும், சுய மதிப்பையும் கற்றுத் தருவதில்லை.

ஆனால் மேலை நாடுகளில் மிகக் கனமான விஷயங்களையும் எளிமையான சுவாரஸ்யமான வடிவத்தில் வழங்குகிறார்கள். படைப்பாற்றலின் முக்கிய அம்சம், ஒன்றை எல்லோரும் பார்ப்பது போல் தான் பார்க்கும். ஆனால் அதைப்பற்றி வித்தியாசமாக சிந்திக்கும் இந்த முறையை மேலை நாடுகள் கற்றுத் தருகின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக இந்தியாவில் படைப்பாற்றலை வளர்க்கும் கல்வி முறை இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை.

இன்னும் ஒரு முக்கியமான வேறுபாடு அமெரிக்கா போன்ற நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மாணவ, மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க, தொழில் நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்த வளாக முறை (Industrial and Institution Integrated Campus Method) செயல்படுத்தப் படுகிறது.

இந்தியாவில் பொதுவாக கல்வி நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் தனித்தனியாகவே இயங்குகின்றன. அறிவு சார் சமூகத்திற்கு வலிமை சேர்ப்பது புதியனவற்றைக் கண்டுபிடிக்கும் ஆற்றல். அந்த ஆற்றலைத் திறம்படப் பயன்படுத்த வேண்டும் என்றால் ஒரே வளாகத்தில் கல்வி நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது வளர்ச்சிப் பணிகளோடு நாம் அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் ஒருங்கிணைக்க முடியும். நம்முடைய எண்ணம், சிந்தனை போன்றவற்றில் மாற்றத்தை அத்தகைய வளாக அமைப்பு முறை ஏற்படுத்தும். இத்தகைய அமைப்பு முறை தான் மேலை நாடுகளில் செயல்படுத்தப்படுகிறது. அதனால் தான் அவர்களின் படைப்புகள் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அத்தகைய அமைப்பு முறை இல்லாததால் வெறும் ஏட்டுப் படிப்பை மட்டும் கற்றுக்கொண்டு, அதை எவ்வாறு நடைமுறைச் சிக்கலுக்குப் பயன்படுத்த முடியும் என்று தெரியாத மாணவர்களை மட்டுமே உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம்.

தன்னம்பிக்கை : வளாக முறை (Industrial and Institution Integrated Campus Method) தங்களின் வளாகத்தில் பயன்படுத்தியதால் உண்டான வளர்ச்சியாக தாங்கள் கருதுவது…

மதன் ஆ. செந்தில் : உயர் கல்வித் தரத்திற்கு உயர கல்வி நிலையங்களும், தொழில் துறையும் ஒருங்கிணைந்து செயல்படுதல் அவசியம். படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் தொழில் துறையின் தேவையை அறிந்து அதற்கேற்ப தங்களை தயார் செய்து கொள்ள இது உதவும் என்பதால் எங்கள் வளாகத்தில் கல்வி நிறுவனமும், தொழில் துறையும் இணைந்து செயல்படும் படி அமைத்துள்ளேன்.

மாணவர்கள் படிக்கும் போது அவர்களுக்குத் தேவையான பயிற்சியைக் கல்வி நிறுவனத்துடன் சேர்ந்து அளிக்காமல் அவர்கள் பட்டம் பெற்ற பின்னர் தங்களது தேவைக்கு ஏற்ப சிறந்த மாணவர்களைத் தேடுவதால் தகுதியான மாணவர்கள் கிடைப்பதில்லை என்பதை அறிந்து கொண்டதால் இத்தகைய வளாக முறை அமைந்த கல்வியைக் கொடுத்து அவர்களின் தரத்தை உயர்த்துவதால் தரமான மாணவர்கள் எங்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியே செல்கிறார்கள்.

தன்னம்பிக்கை : இன்றைய கல்விமுறை எதை நோக்கிப் பயணிக்கிறது?

மதன் ஆ. செந்தில் : ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியச் சமுதாயத்தில் ஒவ்வொரு பொருளாதார மட்டத்திற்கும் ஒருவகைப்பட்ட கல்வி முறை இருக்கிறது. கொடுக்கும் விலைக்கேற்ப கிடைக்கும் பொருளைப் போல கல்வி மாறிக்கொண்டு வருகிறது. இத்தகைய போக்கு ஏற்கனவே பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுள்ள சமுதாயத்தை மேலும் மோசமடைய வைத்துவிடும். எனவே ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவமான சமூகம் உருவாக்கும் கல்வியை எல்லோருக்கும் கிடைக்கும் படி செய்ய வேண்டும்.

படிப்பது அறிவைப் பெறுவதற்கு மட்டுமில்லாமல் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்ய ஒரு வேலையைத் தேடுவதற்கும் என்ற வரைவிலக்கணப்படி நாம் கற்கும் கல்வி வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். நம்முடைய கல்வி முறை இன்னமும் வெறும் குமாஸ்தாக்களை உண்டுபண்ணுவதாகவே இருக்கிறது. ஒரு குறைந்த பட்ச தகுதி கொண்ட ஆசிரியரைப் பார்ப்பதே அபூர்வமாகி வருகிறது. இது மாற்றப்பட வேண்டும்.

தன்னம்பிக்கை : உயர்கல்வி முறையில் எத்தகைய மாற்றம் வேண்டும் என்கிறீர்கள்?

மதன் ஆ. செந்தில் : கல்வியாளர்களும், கல்வி வல்லுநர்களும் கூறும் காரணங்களில் முக்கியமானது,

- தரமான உயர் கல்வி நிறுவனங்களின் பற்றாக்குறை

- தொழில்துறையின் பங்களிப்பு இல்லாமை

- தேர்ந்த உயர்கல்வி ஆசிரியரின் பற்றாக்குறை

நமது கல்வி நிறுவனங்கள் அளிக்கிற உயர் கல்வியின் தரத்தில் இருக்கிற முக்கிய பிரச்சனை, பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களில் படித்து வெளியேறும் மாணவர்கள் வெறும் தேர்ச்சி என்கிற தரத்தில் மட்டுமே இருக்கிறார்கள்.

கல்வித் தரம் என்பது வகுப்பறை போதனைகளைத் தாண்டியது. தொழில் துறையோடு இணைந்து செயல்படுவதாலும், பயனுள்ள ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாலும் மட்டுமே கல்வியின் தரத்தை உயர்த்த முடியும். இதனை அறிந்து பல்கலைக் கழகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மேலை நாடுகளில் ஒரு பல்கலைக் கழகத்திற்கு ஆராய்ச்சிக்கு ஒதுக்கும் நிதியை விட குறைவான அளவே இந்தியாவில் நாடு முழுமைக்கும் சேர்த்து ஒதுக்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் தீர்ப்பதற்கு நமது உயர்கல்வி முறையில் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. அத்தகைய சீர்திருத்தங்கள் கொண்டுவர நமது அரசுகள் தயாராக இருக்க வேண்டும். இந்தியா மற்ற நாடுகளுக்கு இணையாக கல்வியிலும், ஆராய்ச்சியிலும் முன்னேற வேண்டுமெனில் தொழில் நிறுவனங்கள் முன்வந்து கல்வி நிறுவனங்களுக்கும், மாணவர்களுக்கும் உதவ வேண்டும். அப்படிப்பட்ட பாடத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். மேலும் வெளிநாட்டுக் கல்லூரிகளுடன் ஆசிரியர் – மாணவர் பரிமாற்றம் (Teachers – Students Exchange) ஆராய்ச்சிக்கான புதிய வழிமுறைகள், வெளிநாட்டுப் பேராசிரியர்களை நமது கல்லூரியில் பணியமர்த்துவது போன்ற முயற்சிகள் மூலம் இத்தகைய பிரச்சனைகளைச் சரிசெய்யலாம்.

தன்னம்பிக்கை : இளைய தலைமுறைக்கு தாங்கள் கூறுவது:

மதன் ஆ. செந்தில் : ஒருவர் எந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறாரோ அந்த அளவிற்கு அவர் கடுமையான சோதனைகளைக் கடந்து வந்திருப்பார். வெற்றியோ, தோல்வியோ கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் அவர்களைப் போல தொடர்ந்து விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையையும் கொண்டு முயற்சி செய்யுங்கள். சோதனைகளைக் கண்டு மனம் கலங்காத உள்ள உறுதியுடன் போராடக் கற்றுக் கொண்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு நாம் வெற்றி பெறலாம் என்பதை மனதில் நிறுத்தி உழையுங்கள்.

தன்னம்பிக்கை : இன்றைக்கு ஆசிரியர்களின் பங்களிப்பு ….

மதன் ஆ. செந்தில் : ஒரு நாட்டின் அல்லது ஒரு சமூகத்தின் விலை மதிக்க முடியாத வலுவுள்ள வளம் என்பது இளைய சமுதாயம் தான். இந்த இளைய சமுதாயம் உருப்படியாக அமைந்தால் தான் ஒரு நாட்டில் கிடைக்கின்ற இயற்கை வளங்களையும், செயற்கை வளங்களையும் முறையாகப் பயன்படுத்தி கல்வி, பொருளாதார, அரசியல் முதலான துறைகளில் முன்னேறி உலக அரங்கில் வெற்றி கண்டு, தன்னிறைவும், அபிவிருத்தியும் பெற முடியும்.

நமது மாணவர்களுக்கு தங்களுடைய கல்விக் காலம் முழுக்கவும் ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான பயிற்சியே இல்லை. ஒரு விஷயத்தை தகவல்களாக வாசித்து சுருக்குவதற்கான பயிற்சி மட்டும் தான் அவனுக்குக் கிடைக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய பேராசிரியர்களுக்கே அது மட்டும் தான் தெரியும். நம் இளைய மாணவ சமுதாயத்திற்குத் தேவையான உயர்தர கல்வியையும், ஆராய்ச்சி பயிற்சிகளையும் கொடுக்க சிறந்த தகுதியான ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடுதலாக்கப்படவேண்டும்.

தன்னம்பிக்கை : ஆசிரியர் மத்தியில் எத்தகைய மாற்றம் ஏற்பட வேண்டும்…

மதன் ஆ. செந்தில் : கல்வி மனிதனின் கண்களுக்கு நிகரானது. அதனால் தான் அறிவுள்ளவர்களையும், அறிவற்றவர்களையும் குறிப்பிடும்போது பார்வை உள்ளவர்களையும், பார்வை அற்றவர்களையும் ஒப்பிடுகிறோம். நம் சமூகத்தில் கல்வி மேம்பாட்டுக்கான முயற்சிகள் பல்வேறு தரப்பாலும் அர்ப்பணிப்போடு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த வேளையில் கவனிப்பாரற்று விடப்பட்டிருப்பது ஆசிரியர்களின் மனோபாவம் தான்.  ஆசிரியர்களின் மனோபாவத்தில் மாற்றம் ஏற்படாத வரை கல்வியில் இத்தகைய தேக்க நிலையினைக் களைய முடியாது.

ஆரம்பக் கல்வி என்பது ஒரு மனிதனின் கல்வி வளர்ச்சிக்கு இடப்படும் அஸ்திவாரம். அது எவ்வளவு உறுதியாகவும், நேர்த்தியாகவும் கட்டப்படுகிறதோ அந்த அளவிற்குத் தான் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்த மாணவர்களை கொண்ட சமுதாயத்தினை கட்டி எழுப்ப முடியும். இதைக் கருத்தில் கொண்டு பாடசாலையில் ஆசிரியர்கள் போதிக்க வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் பாட சாலைகளில் பெரிய அளவில் காணப்படும் குறைபாடுகளில் முக்கியமானது மாணவர்களுக்கான கல்வி போதனைகளும், வழிகாட்டுதல்களும், ஊக்குவிப்புகளும் கிடைக்காதது தான். கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில் பலர் வளரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ளாமல் அறிவில் தளர்ச்சியுற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதோடு நவீன கற்பித்தல் முறைகளில் இவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இல்லை.

இளமையில் கற்கும் கல்வி கல்லில் எழுதும் எழுத்தைப் போன்றது என்பார்கள். எனவே தான் மிகக் கவனமாக, நெறிப்படுத்தக்கூடிய பயிற்றுவித்தல் தேவைப்படுகிறது இன்றைய இளைஞர்களுக்கு. ஆனால் இந்த விஷயத்தில் வெறும் கடமைக்கு கற்பிக்கின்ற அல்லது பிற்போக்காகக் கற்பிக்கின்ற செயல்பாடுகளே அதிகம் நடக்கிறது. இந்த விஷயத்தில் திட்டமிட்ட கவனம் செலுத்தி ஆசிரியர்களின் மனோபாவத்தில் மாறுதல்கள் ஏற்படுத்த வேண்டும்.

தன்னம்பிக்கை : ரத்தினம் கல்வி நிறுவனங்களின் நோக்கம்…

மதன் ஆ. செந்தில் : எங்கள் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்பிப்பதில் பாடங்களைப் போதிப்பதற்குச் சமமாகவே, மாணவர்களுக்கு தொழில் பயிற்சியும் அளிக்கிறோம். மாணவர்களுக்கு நல்ல விஷயங்களில் ஆர்வமூட்டுவதும், இலட்சிய கனவுள்ளவர்களாக மாற்றுவதற்காக இடையறாது ஊக்கமளித்துக் கொண்டும் இருக்கிறோம். ஒவ்வொரு மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தனிப்பட்ட ரீதியாக எவ்வாறான பங்களிப்பை கொடுப்பது என்று சிந்தித்து செய்து கொண்டிருக்கிறோம். எங்களின் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களும், ஊக்கப்படுத்துதலும் மிகத் தேவையாக இருப்பதால் அதற்கான திட்டமிடலைத் தயாரித்து செயல்படுத்துகிறோம். அத்தகைய செயல்பாடுகள் மாணவர்களுக்குப் புது உற்சாகத்தை அளிக்கிறது. அதோடு அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தையும் கொடுக்கிறோம். பல கல்விசார் வல்லுநர்களை அழைத்து வந்து வகுப்புகளையும், ஆலோசனைகளையும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு செய்கிறோம். நம் நாட்டின் குடிமக்கள் அனைவரும் சிறந்த கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்பது தான் என்னுடைய லட்சியம். அந்த லட்சியத்தை அடைவதில் உறுதியாக இருக்கிறோம்.

தன்னம்பிக்கை : தங்களின் இலக்கு…

மதன் ஆ. செந்தில் : 2001ல் இத்தகைய வளாக முறையை அறிமுகப்படுத்தும் போது என்னுடைய இலக்காக இருந்ததைத் தான் எங்களின் கல்வி நிறுவனத்தின் லோகோவில் பிரதிபளித்தேன். அதாவது மூன்று வட்டங்களில் முதலாவது கல்வியையும்(Education), இரண்டாவது தொழில் நுட்ப வளர்ச்சியையும் (Technical Development), மூன்றாவது பொழுது போக்குடன் நிறைந்த வாழ்வியலையும் (Entertainment Living),  ஒருங்கிணைப்பதாக இருக்கும்.

இந்த மூன்றுக்கும் இடையே ஒரு சங்கிலித் தொடர்பு இருக்கும். கல்வி, தொழில் நுட்பத்திற்கு உதவியாகவும், தொழில் நுட்பம் வாழ்வியலுக்கு உதவியாகவும்  வாழ்வியல் முறை கல்வி மேம்பாட்டிற்கு உதவியாகவும் ஒன்றையொன்ற சார்ந்து வளர்ச்சி பெறும் நிலையிலேயே எங்கள் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களை வடிவமைத்தேன். இத்தகைய திட்டத்தைப் பார்த்து போட்ஸ்வானா மற்றும் பனாமா நாடுகள் எங்களை அழைத்து கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த நாடுகளில் இத்தகைய வளாக முறையை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தன்னம்பிக்கை : குடும்பத்தின் ஒத்துழைப்பு குறித்து…

மதன் ஆ. செந்தில் : என் அம்மா ஒரு சிறந்த மேலாண்மையைக் கொண்டு பள்ளியை நிர்வகித்தவர். அவரிடம் இருந்து அந்த மேலாண்மைத் தத்துவத்தை பெற்றுக் கொண்டேன். என் அப்பா எப்போதும் எனக்கு ஊக்கத்தையும், ஈடுபாட்டையும் கொடுத்துக் கொண்டிருப்பவர். எனது மனைவி ஷீமா செந்தில் இந்தியாவில் பிறந்த அமெரிக்க குடியுரிமை பெற்றவராக இருந்தாலும், ஒரு சதவிகித அளவு கூட அமெரிக்க கலாச்சாரத் தாக்கம் இல்லாதவர். ரிப்ஸ் (RIPS  Rathinam International Public School) பள்ளியை திறம்பட நிர்வகித்து வருகிறார். மேகா செந்தில் என்ற மகளும், லோகாஷ் செந்தில் என்ற மகனும் எனக்கு எப்போதும் புத்துணர்ச்சியைத் தந்து கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள்.

தன்னம்பிக்கை : பாதித்த புத்தகங்கள்

மதன் ஆ. செந்தில் : வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரின் வாழ்விலும் புத்தகங்களின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும். அப்படி எனக்கு உந்து சக்தியாக இருக்கும் புத்தகங்களில் முக்கியமானது மேலாண்மைத் தத்துவங்களைப் போதிக்கும் ‘One Minute Manager’ என்ற புத்தகமும், வாரன் பப்பர்ட்டின் நேர்காணலும் தான்.

ஒரு நாட்டின் எதிர்காலம் நான்கு சுவர்களுக்குள் நிர்ணயிக்கப்படுகிறது என்ற மொழிக்கு ஏற்ப நல்லொழுக்கமும், நற்சிந்தனையும் கொண்ட ஒரு சமூகமே நாகரிகமான ஒரு தேசத்தின் அடித்தளம் மட்டுமல்லாமல் அடையாளமும் கூட என்று நினைத்து அத்தகைய சமூகத்தை உருவாக்கும் பொருட்டு மாணவர்களின் மூளையை செழிப்புள்ளதாகவும், தெளிவுள்ளதாகவும் மாற்றியமைக்கும் கல்வியை கொடுத்துக் கொண்டிருக்கும் இரத்தினம் கல்வி நிறுவனங்களின் சேர்மன் திரு. மதன் ஆ. செந்தில் அவர்களின் சேவையை தன்னம்பிக்கை வாழ்த்துகிறது.

உள்ளத்தோடு உள்ளம்
இனியொரு விதி செய்வோம்

எதையும் அறிந்து கொள்ள ஆர்வமும், முயற்சியும் போதும். ஆர்வம் இருக்குமானால் அறிவைப் பெறுவது இன்றைய காலத்தில் பெரிய விஷயமல்ல. புத்தகங்கள் மூலமாகவும், இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அறிவு கிடைக்கிறது.

ஆனால் அறிந்தபடி நடப்பது அவ்வளவு சுலபமல்ல. எது சரி என்று அறிவது அறிவு என்றால், அந்த சரியான பாதையில் செல்வது வாழ்க்கை. எது சிறந்தது என்பது அறிவு என்றால் எப்படி சிறப்பாக வாழ்வது என்பது தான் வாழ்க்கை.

நல்ல நல்ல விஷயங்களைப் படித்தோ அல்லது கேட்டோ அறிந்தவுடன் நாம் ஒரு உருப்படியான விஷயத்தைச் செய்ய முற்பட வேண்டும். என்னவென்றால் அதை நாம் வாழ்வில் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்று சிந்தித்து அதை நடைமுறைப்படுத்துவது தான். அப்போது தான் அது அவ்வளவு சுலபமல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் திரும்பத் திரும்ப அதைச் சிந்தித்து தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் நடைமுறைப்படுத்தும் போது தான் வாழ்க்கை மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த அறிவு வாழ்க்கைக்குப் பயனுள்ளதாகிறது.

“நிலவைச் சுட்டிக் காட்டும் விரலையே பார்த்துக் கொண்டு இருந்தால் நிலவை நாம் காண முடியாது” என்ற ஆதிசங்கரரின் உவமையைப் போல் நிலவு என்கிற வாழ்க்கையைக் காண பார்வையை விரலில் இருந்து எடுத்து அது காட்டும் திசைக்குத் திருப்ப வேண்டும். விரல்களைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிலவைக் கண்டு விட்டதாக திருப்தியடைவது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வது போல தான். அதைத் தவிர்த்து கற்ற விஷயங்கள் சொல்லும் வழியில் நேர்மையுடனும், நம்பிக்கையுடனும் நம் வாழ்க்கையைத் திருப்ப வேண்டும்.

அன்புடன்

நூல் வெளியீட்டு விழா
தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர் இல.செ.க.

நாள் 	:	15.4.2012 ஞாயிறு

நேரம்	: 	காலை 10.00 மணி

இடம்	:	இன்டக்ரல் யோகா இன்ஸ்ட்டிடியூட்,

ஆர்.எஸ். புரம் ,

கோவை.

தன்னம்பிக்கையும் – நானும்

திரு. சீனிவாசன் திரு.பாபு  	; அன்னபூர்ணா நிறுவனங்கள்

திருமதி ரமா சுந்தர்ராஜன்  	; அன்னபூர்ணா நிறுவனங்கள்

திரு.‘அரோமா’ பொன்னுசாமி 	; தலைவர்,அரோமா நிறுவனங்கள்

திரு. மு.வேலாயுதம்		; விஜயாபதிப்பகம்

திரு.ஓ.ட. நடராஜன்		:ஓ.ட.ச டிராவல்ஸ்

திரு. ஆர்.கே. இராமசாமி 	; தலைவர்,ஆர்.கே.ஆர். கல்வி 					 நிறுவனங்கள்

திருமதி. அனுஷா மகேஷ் 	; இஉஞ, பார்க் கல்வி நிறுவனங்கள்

திரு. செங்குட்டுவன் 		; இயக்குநர், வள்ளுவர் கலை 					அறிவியல்&மேலாண்மைக் கல்லூரி திரு. என். வெங்கடேஷ் 	; இயக்குநர், சிஸ்மென்டெக் 					 குழுமங்கள்

திரு. ந.த.ஓ. தேவராஜ் 		; ந.த.ஓ. ஸ்டீல்ஸ்

திரு. பிரதீப் குமார் 		; இயக்குநர், ‘எலைட்’ குழுமங்கள்

திரு. ஆனந்த் பழனிசுவாமி 	; சேர்மன், ‘டாக்சி டாக்சி’

திரு. தினேஷ் இராமசாமி 	; இயக்குநர், அய்யன் திருவள்ளுவர் 				 கலை அறிவியல் கல்லூரி

திரு. ஜெகதீஸ் சந்திரன் 	; இயக்குநர், ஒயங நெட்வொர்க்ஸ் திரு. மதன் ஆ. செந்தில்	; சேர்மன், இரத்தினம் கல்வி 					 நிறுவனங்கள்

திரு. ட.ந.த. ஜவஹர்		; ட.ந.த. சில்க்ஸ்

திரு. சூரியன்			: சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்

தன்னம்பிக்கை மாத இதழ் நடத்திய கவிதை, கட்டுரை வாசகர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தல்

பரிசு வழங்குவோர்

சாவித்திரி போட்டோ ஹவுஸ் நிறுவனத்தார், கோவை

நன்றியுரை 			: பேரா. கே.நாகராஜ்,

இணை ஆசிரியர்,

தன்னம்பிக்கை மாத இதழ்