![]() |
உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!!வாழ்க்கையில் ஒழுங்கையும், நேர்மையையும் தனது கொள்கையாகக் கொண்டுள்ள மாணவ சமுதாயத்தை உருவாக்கவும், இளைய தலைமுறையின் வளர்ச்சிக்கும் தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் கல்லூரியை நடத்துபவர். 27 வயதில் சிறந்த நிர்வாகத்திறமைக்காக இத்தாலியின் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர். Continue Reading » |
February, 2012
உள்ளத்தோடு உள்ளம்
பார்வையிழந்த பெண்ணொருத்திக்கு தன்மீது வெறுப்பு. காரணம், இந்த உலகத்தைப் பார்க்க முடியவில்லையே என்கிற ஆதங்கம். அதே சமயம் அவளுக்கு ஒரே ஆறுதலாக அவள் காதலன். “எனக்கு மட்டும் பார்வை கிடைத்தால் அடுத்த நிமிடமே உன்னைத் திருமணம் புரிந்து கொள்வேன்” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாள். ஒருநாள் அவளுக்கு இரண்டு கண்கள் தானமாகக் கிடைக்கப் போகிற செய்தி அறிந்து ஆனந்தத்தில் குதித்தாள். காதலனைக் கட்டியணைத்தாள். அறுவை சிகிச்சை முடிந்ததும் அவளுக்குப் பார்வை கிடைத்தது. பார்வை கிடைத்த மகிழ்ச்சியில் ஆசை ஆசையாக தனது காதலனைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி. அவனோ பார்வையிழந்தவனாக இருந்தான். என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? அன்பேÐ என்றான். அவளோ, “மன்னித்துக் கொள்” உலகம் அழகானது. பார்வையிழந்த உன்னைத் திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லை. உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் சொல். செய்கிறேன் என்றாள். சில நாட்களுக்குப் பிறகு காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்”.
சுயநலமற்ற அன்பு கொண்டு ஒருவருக்கொருவர் எஞ்சி விஞ்சி நிற்கும் “காதல்” என்பதெல்லாம் பழைய சமாச்சாரம். இப்போதைய ‘காதல்’ எல்லாம் கலாச்சாரம் மீறிய கசமுசா. அப்படிப்பட்டதற்கு ஒரு தினம் என்று கொண்டாடும் இளமைக்கு வந்து சேர்வது திண்டாட்டமே!
அன்புடன்
க. கலைச்செல்வி
ஆசிரியர்











