எழுத்துக்கள்
![]() |
Author: கவிஞர் மு. மேத்தா
|
என்னையே நான்
கண்டுகொள்ள உதவும்
கண்ணாடி
என்னை
அறியாதவர்க்கு
அறிமுகப்படுத்தும்
புகைப்படும்
சில சமயம்
அலைநீரில் நிழல்
ஒரு சில
சமயங்களில்
கற்களில் என்
சிலை வார்ப்பு
முகம் திருப்பிக் கொள்ளும்
பகைவரிடமும்
எனக்காக வாதாடும்
இன்னொரு
முகம்…
சிலருக்கு வெறும்
நகம்
எனக்கு
முகம்
Similar Post:
- None Found













புகை படும் என்பது புகைப்படம் என்று இருந்தால் கவிதை மேலும் சிறக்கும்.
வெப் மூலமாக படிப்பதற்கு உதவிய தன்னம்மிக்கை நூல் நிறுவனத்துக்கு நன்றிகள்.
பா. சரவண பவன்