இல.செ.க வின் சிந்தனை
![]() |
Author: தன்னம்பிக்கை
|
சிந்தனை
ஒவ்வொரு நாளும் சிறிதாவது முன்னேற்றத்தைக்
காணாமல் வாழ்வது என்பது நல்லதல்ல.
நேற்றிருந்ததைப் போல இன்றும் இருந்தால்,
உங்கள் வாழ்க்கை மிகச் சாதாரண
வாழ்க்கைதான். தன்னம்பிக்கையுடன்
தினமும் முன்னேறுங்கள்.
வாழ்க்கை சொர்க்கமாகும்.
*********
சிந்தனை
“எனக்குத் தேவையான அனைத்தையும் நான் பெறுவேன்” என்று நினைத்தவர்கள் மட்டும்தான் உறுதியாக வெற்றி பெறுகிறார்கள்
*********
சிந்தனை
தமிழ் இளைஞர்களும் மகளிரும் உலகத்துப் பழமையான கலைகளில் ஒன்றாகிய தமிழின் தொன்மை இலக்கியம், கலை, பண்பாடு, நாகரீகம், வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை உலகத்திற்கு எடுத்து இயம்ப வேண்டும். உலகின் எத்தனையோ இனங்களில் தமிழினத்தின் தாய்மொழியின் தொன்மைச்
சிறப்பினை உலக அரங்கில் அதற்குரிய
இடத்தினை நிலைநாட்ட வேண்டும்.
Similar Post:
- None Found












