உள்ளத்தோடு உள்ளம்
Author: ஆசிரியர் குழு
|
ஜூன் 23லிருந்து 27 வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் சிறப்புடன் நடைபெற உள்ளது.
இன்னும் தமிழின் பெருமையை உலகம் அறியச் செய்கிற அற்புத ஏற்பாடு இது. இம்மாநாடு நிகழ்வு கள் வளரும் தலைமுறைக்கு தமிழை எப்படி யெல்லாம் கொண்டு செல்லவிருக்கிறது என்கிற எதிர்பார்ப்புக்கு குறைவு இருக்க முடியாது என்பதனால் வாழ்த்துக்களோடும், அறிவிப்புக்க ளோடும் இம் மாநாடு முடிந்து விடக்கூடாது.
தமிழன் தமிழன் சந்திக்கும் போது கூட “தமிழ்” பேச மறுக்கிறான் என்கிற பேச்சு இனி மாற வேண்டும். பல மொழிகள் கற்றுக் கொண்டாலும் தாய்மொழி தமிழை நேசிக்கவும் சுவாசிக்கவும் செய்கிற செய்திகள் “தேனாக” ஒவ்வொருவரின் காதிலும் வந்து பாய வேண்டும். மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் என எங்கும் எதிலும் தமிழ் தலையாய இடம்பிடித்து வாழ்வுக்கு ஆதார மாகவும் மாறவேண்டும்.
மாறும். அந்த மாறுதல்களை இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு செய்யும் என்கிற நம்பிக்கையுடன் மாநாடு சிறக்க வாழ்த்தி மகிழ்கிறோம்.
- None Found











