வல்லபாய் படேல்

குஜராத் மாநிலத்தில், வசதியற்ற ஒரு விவசாயக்குடும்பதில் பிறந்தவர்.

கல்வியின் மீது இவருக்கிருந்த ஆர்வம், லண்டன் சென்று பார் அட் லா படிக்க வைத்தது. தாய் நாட்டுப்பற்றஅங்கேயே சட்டப்பேராசிரியர் பதவி கிடைத்ததும், இந்தியாவுக்கு இட்டு வந்தது.

அறியாயங்களுக்கு அடங்கமறுக்கும் ஆவேசம், பள்ளிப் பருவத்திலேயே ‘வெளியில் நோட்டுகள் வாங்கக் கூடாது தன்னிடம் தான் வாங்க வேண்டும் என்று ஆணையிட்ட ஆசிரியை எதிர்த்துப் போராட வைத்தது.

மலைக்கு நிகரான இவரது மன உறுதி, நீதி மன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கும் போது வந்த தந்தியில் மனைவியின் மரணச்செய்தி இருந்ததைப் படித்தும், தொடர்ந்தும் வாதாடிய பின்னே உட்கார வைத்தது.

சாதுர்யமான இவரது வியூகங்களும், செயல் முறைகளும், ஐநூற்றுக்கும் அதிகமான தனித்தனி சமஸ் தானங்களை இந்தியாவுடன் இணைய வைத்தது. இது இரும்பு மனிதரின் சாதனைகளின் உச்சம்

- தங்கவேலு மாரிமுத்து