- A.G. மாரிமுத்துராஜ்

  • உங்களுடைய வேலையில், நீங்கள் உண்டாக்கும் தரத்தைப் பொறுத்தே உங்களுடைய வாழ்க்கை யின் தரமும் தீர்மானிக்கப்படுகிறது.
  • மிகச் சிறியவற்றிலிருந்தே மிகப்பெரியவற்றை மனிதர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • நம்முடைய அறிவுத்திறன்கள் பயிற்சிக்கு உள்ளாக்கப்படாவிட்டால், விரைவிலேயே, அவை, ஆற்றலை இழந்து சோர்ந்து விடும்.
  • உங்களுக்குறிய வழியை நீங்களே கண்டு பிடியுங்கள், அல்லது நீங்களே அதை அமைத்துக் கொள்ளுங்கள்!
  • நம்மில் மிகச்சிறந்த அளவிற்கு வலிமையுள்ள வர்கள் கூட தம்முடைய சுற்றுப்புறச் சூழல் களுக்கு அப்பால் செல்லமுடிவதில்லை. நாம் நம் சுற்றுப்புற சூழ்நிலையால் இடைவிடாமல் மாறுதல்களுககு உள்ளாகி வருகிறோம்.
  • உங்களிடம் உள்ள ஆற்றலைக் கண்டுபிடித்து, அதை வெளிக்கொண்டுவரும் வகையில், உங்களுக்கு உதவி செய்யக்கூடிய உங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய, உங்களை ஊக்கு விக்கக்கூடிய, மனிதர்களை உங்களுக்கு நெருக்க மாக வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுடைய வெற்றிகரமான வாழ்க்கைக்கும் சராசரியான இருப்பு நிலைக்கும், இடையில் உங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.

    க்ஷி வாய்ப்புகள் புகழ்பெற்ற மனிதர்களுக்கு அபூர்வ மாகவே கிடைத்திருக்கின்றது. எல்லாவிதமான, போராட்டங்களையும் சந்தித்த பின்னே சாதனைக ளை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

  • சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் மனிதனின் ஜீவனாக இருக்கிறது. உறுதியான வைத்துள்ள மதிப்பீடும், நீங்கள் மற்றவர் களைப் பற்றிய உங்கள் மதிப்பீடும் உயர்வான தாக இருக்கும்படி பாத்துக் கொள்ளுங்கள்.