![]() |
Author: எஸ். செல்வராஜ்
|
- பரமஹம்ச நித்யானந்தர்
புதிய தொடர்…
எல்லாவற்றையும் தாண்டலாம் – 1
› பரமஹம்ஸ நித்யானந்தர் தமிழகத்தின் ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் ஜனவரி 1, 1978ஆம் ஆண்டு பிறந்தவர்.
› பக்தி மார்க்கத்தின் மீது ஈடுபாடு கொண்டு தன்னுடைய பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி பரிவராஜக வாழ்க் கையை தொடர்ந்தவர்.
› இரண்டாயிரம் மைல்களுக்கு மேல் பாதயாத்திரை யாகச் சென்று இந்தியாவின் எல்லா ஆன்மீக நிறுவனங்களைப் பற்றியும், அவற்றின் செயல்பாடு களையும் நன்கு ஆராய்ந்து தேர்ந்தவர்.
› இமயமலையில் கடுமையான தவத்தின் பயனாக ஜனவரி 1, 2000ஆம் ஆண்டு ஞான அனுபூதி எனும் பேரானந்த நிலையை அடைந்தவர்.
› நித்ய ஆனந்தம் எல்லா மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக “தியான பீடம்” எனும் சேவை நிறுவனத்தை ஜனவரி 1, 2000ஆம் ஆண்டில் தோற்றுவித்தவர்.
› ஞானக் கருத்துக்களாலும், தியான முறைகளாலும் மனிதர்களின் அறியாமை இருளை, சோம்பல் இருளை போக்கிடும் ‘ஞான குருவாக’ விளங்கிவருபவர்.
› கோடான கோடிமக்களின் ஆனந்தத்திற்கு வழி அமைத்து தரும் ‘தீயான பீடத்தை’ உலக நாடுகள் எங்கும் பரந்து விரியச் செய்திருப்பவர்.
பலவாறு போற்றி வணங்கி மகிழும் பரமஹம்ஸ நித்யானந்தர் நம் இதழுக்காக “உயர்ந்த பொக்கிஷங்களைப் பெற…” எனும் தொடரை நமக்கு தந்தருளியிருக்கிறார்.
இனி எல்லோர் வாழ்விலும் ஏற்றமே நித்யானந்தமாய்…….
இனிய சத்தியம் ஒன்றோடு துவங்குகின்றேன்.
“உயர்ந்த உச்சக்கட்ட குதூகல உணர்வில் எப்போதும் வாழுங்கள்
உடல் தன்னிடமுள்ள உயர்ந்த
பொக்கிஷங்களையும்
மனம் தன்னிடமுள்ள உயர்ந்த
பொக்கிஷங்களையும்
உங்களுக்கு பரிசாக தந்து
கொண்டேயிருக்கும்.”
Live in continuous excitement,
Mind and body will deliver its best to you.
வாபர் ஒருவர், “ஏன் தியானம்?” “நிஜமாகவே தியானம் மனிதனுக்கு இன்றி யமையாத ஒன்றுதானா? வாழ்க்கையை நன்றாய் வாழ்வதற்கு நாங்கள் சம்பாதிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கும்போது தியானத்திற்காக நேரம் செலவிடுவது கண்டிப்பாக அவசியம்தானா? தயவு செய்து சொல்லுங்கள்!” என்று கேட்டார்.
“அவசியம்தான், என்று நான் சொல்வதை விட, அவசியம்தானா? என்று நீங்கள் முடிவெடுப்பதையே விரும்பு கின்றேன்.”
“அந்த முடிவை எடுக்க முடியாமல் தான் தடுமாறுகிறேன்.” “சரி, நீங்கள் நினைத் ததை நினைத்த படி செய்து முடிக்க எது அவசியம்? சொல்லுங்கள்.
“நிச்சயமாய் மிகுந்த புத்திசாலித் தனமும், நல்ல உடல் ஆரோக்யமும் வேண்டும்.”
“அப்படியென்றால், நல்ல உடல் பலமும், மனோபலமும் நினைத்ததையெல்லாம் சாதிக்க தேவையென்கின்றீர்கள். சரியா?”
“ஆம்!”
“நல்லது.
அடுத்த கேள்வி.
சமுதாயத்தில் நீங்கள் விரும்பிய தெல்லாம் சாதிக்க எது அவசியம்? சொல்லுங்கள்.”
“பணமும், பதவியுமில்லாமல் எதைச் சாதிக்க முடியும் இந்த சமுதாயத்தில்?”
ஆனால், ‘ஆன்ம பலமில்லாமல் வேறெந்த பலம் இருந்தாலும் எதையும் சாதிக்க முடியாது’ எனும் உண்மை உங்களுக்குத் தெரியுமா?
ஆன்ம பலமில்லாமல் உடல் பலத்தை மட்டும் அதிகரித்தால் அவன் முரடனாகி விடுவான் (Violence).
அதைப்போல் ஆன்ம பலமில்லாமல் மனபலம் மட்டும் அதிகரித்தால் அவரிடம் கள்ளத்தனமும், குறுக்குபுத்தியும் தான் மேலிடும் (cunningness).
ஆன்ம பலம் ஓரளவிற்காகவாவது பொங்கினால்தான்…
உடல்பலம் கூட ஒருவரை முரடராக்காமல் பலசாலியாக்கும்.
மனபலம் கூட ஒருவரைக் கெட்டவராக் காமல் நல்லவராக்கும்.
“சுருங்கச் சொன்னால் ஒருவர் உயர்வதற் கான அடிப்படை மூலதனமே ஆன்ம பலம்தான்.”
“நீங்க சொன்ன பிறகும்தான் ஒரு புது கோணமே எனக்கிப்போது புரிய வருகின்றது”
“ஹிட்லர் கூட மிக அதிக படைபலம் பெற்றவர்தான்.
என்ன செய்வது! ஆன்ம பலமில்லாமல் அதிகரிக்கும் மனபலம் மிக மோசமானது சைக்கோத்தனமாக மாறிவிடுகின்றது.”
பணபலமும், பதவி பலமும், மக்கள் பலமும் தன்னைச் சுற்றி அதிகரிப்பதற்காக உழைக்கும் ஒருவர் அவற்றிற்க்கிணையாக, தனக்குள் ஆன்மபலம் அதிகரிக்கின்றதா என்று ஒவ்வொரு படியிலும் பார்த்தாக வேண்டும். ஆன்ம பலம் பெருகாமல் மற்ற பலங்களை அதிகரித்தால் புலிவாலை பிடித்த கதையாக வாழ்க்கை மாறிவிடும்”
“ஆன்மபலம் என்றால் என்ன? சரியான விளக்கம் வேண்டும்.”
“ஆன்மபலம் என்றால் காரணமில்லாமல் பொங்கும் ஆனந்த சக்தி. இந்த ஆனந்தசக்தி ஒருவருக்குள் பொங்க ஆரம்பித்து விட்டால், பலவீனம் கூட பலமாகி விடும்.
வீரனுக்கு புல்லும் ஆயுதம்!
தீரனுக்கு சொல்லும் ஆயுதம்!
எனும் உயர்ந்த நிலையெல்லாம், ஆனந்த சக்தி பொங்க வாழும் ஒருவருக்குத்தான் சொந்தமாகும். அவரால்தான் எதைக் கொண்டும் ஜெயிக்க முடியும்.”
“ஒருவருக்குள் நேரடியாக ஆனந்த சக்தியைப் பொங்க வைக்க உதவுவதுதான் தியானம். இந்த தியானத்திற்காக நேரம் செலவு செய்யலாமா? இல்லையா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்,” என சொல்லி முடித்த போது வாலிபரின் கண்களில் பளிச் சிட்ட தெளிவைக் கண்டு ஆனந்தமடைந்தேன்.
மேற்குறிப்பிட்ட சம்பாஷணை மூலமாக ஆன்மபலத்தை அதிகரிப்பதின் முக்கியத் துவத்தை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க முயற்சிக்கிறேன்.
உங்களுக்குள் ஆன்மபலத்தை அதிகரிக்க முதலில் உழையுங்கள். எந்த நிலையில் இருந் தாலும் உங்களை அது வீரராகவும், தீரராகவும், சாதிப்பவராகவும், உயர்ந்த மனிதராகவும் மாற்றும்.
ஆத்ம தியானம்
மந்தத்தன்மை தான் உங்களோடேயே இருந்து கொண்டு உங்களை முன்னேற விடாமல் தடுத்து கொண்டேயிருக்கும் எதிரி.
இந்த மந்தத்தன்மை எப்போது வருமென்றால், நீங்கள் உங்களைத் தனித் தீவாக உணரும் போதுதான்!
உடல் பலத்தை அதிகரிப்பதிலிருந்து, பணபலத்தை அதிகரிப்பது வரை ஏதோ ஒருவகையில் தன்னை தனித்தீவாக்கும் முயற்சி தான்.
தனித்தீவிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டாலே, நிஜமான ஆன்மபலம் விழித்துக் கொள்ளும்.
‘நீங்கள் வரையறைக்குட்பட்டவரல்ல’, என்ற நிஜத்தை உணர்ந்துவிட்டாலே வரை யறைக்கு அப்பாற்பட்ட ஆனந்த சக்தி பொங்க ஆரம்பித்து விடும். இதற்கு இந்த தியானம் நேரடியாக உதவும்.
கண்களை மூடி நிமிர்ந்து தளர்வாக அமருங்கள். ஒரு பலூன் விரிவடைவது போல நீங்கள் எல்லா பரிமாணங்களிலும் விரிவடைந்து கொண்டே செல்வதை உணருங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக வீட்டளவிற்கு விரிவடைவதை முதலில் உணருங்கள்.
அடுத்து பூமியளவிற்கு விரிவடைவதை முதலில் பாருங் கள். அப்படியே வானம் வரை விரிவடைவதை யும், அதையும் தாண்டி நிலவும், நட்சத்திரங் களும், பால்வெளித்திரள்களும் உங்களுக்குள்ளே வருமளவுக்கு விரிவடைந்து கொண்டே செல்லுங்கள்.
இந்த தியானத்தை அடிக்கடி செய்து வரவர ஆன்ம சக்தி பொங்கிக் கொண்டே இருக்கும்.
பலங்களையெல்லாம் தாண்டிய பலம் பொங்க ஆரம்பிக்கும்.
நன்றி : P.S.K. செல்வராஜ்






