- பேராசிரியர். டாக்டர். இரா. மோகன்குமார்

வாழ்க்கைப் பாடம்

பேராசிரியர். டாக்டர்.
இரா. மோகன்குமார்
மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்,
பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி.

2. உறவுகளை மேம்படுத்துவோம்

மகிழ்ச்சி நிச்சயம்

நண்பர்களுடன், உறவினருடன், குடும்பத் தாருடன், சுற்றத்தாருடன், உடன் பணி வோருடன், எந்த அளவிற்கு சுமுக உறவை தொடர்கின்றோமோ அந்த அளவிற்கு சந்தோஷம் நம்மோடு உறவாடும். நட்புறவு என்பது ஒரு மனநிலை மட்டுமே. இயற்கையான மனநிலை என்பது இன்பமும், துன்பமும் அற்ற மனநிலையே. அத்தகைய சுத்தமான மன நிலையை இன்பம் மற்றும் துன்பம் போன்ற புற மாயைகளால் (நாம் நமக்கு கிடைக்கும் அனுபவங்களின் அடிப்படையில் உள் உலகிற்கு மனதிற்குள்) இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆகவே இன்பம் மற்றும் துன்பம் என்பது நம்மால், வெற்றி உலகில் இருந்து, சூழ்நிலைகள், மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் உள் உல கிற்கு (மனதிற்குள்) இறக்குமதி செய்யப்படுகிறது.

ஆகவே நம் மனது இன்பமாக இருக்கின்றதா அல்லது துன்ப மனநிலையில் காணப்படுகிறதா என்பது, நாம் என்ன செய்தியை மனதிற்கு வழங்குகிறோம் என்பதை பொறுத்ததே!

நாம் நம் மனதிற்கு வழங்கும் செய்திகள் அனைத்துமே, நமக்கு நம் சுற்றுப்புறத்தில் காணப்படும் மனிதர்கள், உணர்வுகள் உயிரற்ற பொருட்கள், மற்றும் மிருகங்களோடு காணப் படும் உறவினை/தொடர்பினை அடிப்படை யானவையே. எடுத்துக்காட்டாக,

நமக்கு மிகவும் பிடித்த களிமண் பொம்மையோடு விளையாடுகிறோம். மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். சந்தோஷ செய்தியை மனதிற்குள் செலுத்துகிறோம். உள்ளம் மகிழ்ச்சிக் களிப்பில் தத்தளிக்கின்றது.

தீடீரென்று நம் கவனக் குறைவு காரணமாக, களிமண் பொம்மை கீழே விழுந்து உடைந்து விடுகின்றது.

இத்தகைய சூழலில் நாம் என்ன செய்தியை மனதிற்கு வழங்குகிறோம் என்பது மிக மிக முக்கியம். மட்டுமல்ல இத்தகைய சூழலில் நாம் நம் மனதிற்கு வழங்கும் செய்திகள், நம் அனுபவம், மனோபாவம், குணநலன்கள், மதிப் பீடுகள், மனநலம், மற்றும் உளவியல் நிலையை பொறுத்தது.

நம்முடைய மனோபாவம் பலமான, நேர்மறையான, உலக ஞானத்துடனான, உன்னத நிலையில் இருக்குமானால், அந்த களிமண் பொம்மை உடைந்து போனதை உலகத்தில் அன்றாடம் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வாக ஏற்று பரவாயில்லை, இன்னொரு சிறந்த பொம்மையை வாங்கும் வாய்ப்பு வந்துவிட்டது என்ற முதிர்ச்சியுடைய மேன்மை கொண்ட, மகிழ்ச்சியின் செய்தியை மனதிற்கு நாம் வழங்குவோம்.

மனோவியல், அல்லது உளவியல் என்பது மிகவும் சிக்கலான ஒரு துறை. ஏனென்றால் மேற்கண்ட எடுத்துக் காட்டில் பொம்மை உடைந்த போது ஒருவர் எடுக்கும் நிலைபாடு என்பது, அவர் சிறுவயதில் இருக்கும் போது இதே போன்று சூழ்நிலைகள் ஏற்பட்டிருந்த போது அவர் பெற்றோர் அவரிடம் எப்படி நடந்து கொண்டனர் என்பதை பொறுத்தும் அமைகிறது.

அவர் சிறுவயதில் இதே போன்று தெரிந்தோ (அ) தெரியாமலோ ஒரு பொம்மை கீழே விழுந்து உடைந்திருந்த போது, தாய், தந்தை யிடமிருந்து அடி, உதை, திட்டு வாங்கி யிருந்தால், அவர் மனதில் தீய அனுபவங்கள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும்.

அதை விட முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய இடியாப்ப சிக்கல் என்ன வென்றால், உங்களை ஒரு பொம்மை கீழே விழுந்ததற்காக அடித்து உதைத்த பெற்றோர் அப்படி துன்புறுத்த, அவர்கள் பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகத்தினரிடமிருந்து பெற்ற அனுபவங்களே காரணம் ஆகும்.

இந்த இடியாப்ப சிக்கன், முடிச்சுகளை அவிழ்த்து, சந்தோஷ பெருவாழ்வு என்னும் ஏரியில் மகிழ்ச்சி முத்துக்குளியல் நடத்துவது முடியுமா? என்ற கேள்வி வருகின்றதா!

நண்பர்களே! நிச்சயம் உங்கள் தற்போதைய மனோபாவம் மற்றும் மனநிலை யில், மாற்றத்தை கொண்டு வர முடியும். இக் கட்டுரை ஆசிரியரின் “Deep Change in Mind For Success” என்ற முழுநாள் பயிலரங்கம், நம் மனோ பாவத்தில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தி நம்மை வெற்றிப் பாதையில் திருப்பி விடுகிறது என்பது இதுவரை அந்த பயிற்சியில் பங்கேற்ற பல்வேறு பங்கேற்பாளர்களுடைய கருத்து.

உங்கள் மூதாதையர் பலருடைய வாழ்வு முடிந்துவிட்டது. உங்கள் ஆசிரியரின் பலருடைய பின்னணிகளை மறந்திருப்பீர்கள். உங்களை வார்த்தெடுத்த சமூக பின்னணி உருத் தெரியாமல் அப்படியே மாற்றமடைந்திருக்கும். இன்று நீங்கள் சந்தோஷமாக வாழ, உங்களில் நீங்கள் என்ன மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை பற்றி சிந்தியுங்கள். மகிழ்ச்சி நிச்சயம். மகிழ்ச்சியை தொடர்ந்து வெற்றியும் நிச்சயம்.

உறவுகளை மேம்படுத்தும் விதிகள் :

உறவுகளை மேம்படுத்துதல் மகிழ்ச் சிக்கு அடிப்படை, உறவுகளை மேம்படுத்து வதில் பல்வேறு காரணிகளின் தாக்கங்கள் காணப்பட்டாலும், நாம் கீழ்க்கண்ட உறவு களை மேம்படுத்தும் விதிகளை பின்பற்றினால், நம்மைச் சுற்றி வசிப்போர் மற்றும் செயல் படுபவர்களோடு நல்ல உறவை போற்றி வளர்க்க முடியும். அவர்களும் மகிழ்ச்சி யடையவர். நாமும் சந்தோஷம் கொள்ளலாம்.

விதி 1 :

நியூட்டனின் 3வது விதி அறிவுறுத்து வது போன்று நாம் என்ன மற்றவர்களுக்கு வழங்கு கிறோமோ, அதையே தான் நாம் மற்றவர்களிடமிருந்து திரும்ப எதிர்பார்க்க முடியும். அதாவது நான் நன்மையை கொடுத்தால், எனக்கு நன்மை கிடைக்கும். நான் தீமையை பகிர்ந்தளித் தால், எனக்கு தீமையையே பகிர்ந்தளிக்கப்படும்.

ஆகவே நீங்கள் ஏன் குறைந்த தீமையை வழங்கி அதிக தீமையை அடைய முயற்சி செய்யப் போகிறீர்கள். புத்திசாகளை நீங்கள் முடிந்த அளவுக்கு அடுத்தவருக்கு நன்மையை அள்ளி அள்ளி வழங்குவீர். உங்களுக்கும் அடுத்தவர், அதைவிட பல மடங்கு அதிக நன்மைகளை வாரிவாரி வழங்குவர்.

இந்த இயற்கையின் உறவை மேம் படுத்தும் விதியை நம்புங்கள். பயன்படுத்துங் கள், உறவும் மேம்படும், சந்தோஷமும் வசப் படும். வளர்ச்சியும் தூரிதப்படும். சாதனையும் சாத்தியமாகும்.

விதி 2 :

நீ யார்? என்ற கேள்விக்கு நேர்மையாக விடை காணுங்கள். உறவுகள் மேம்படுவது உறுதி.

நீங்கள் உங்களை நோக்கி மிகவும் உறுதியாக

நீங்கள் யார்? என்ற கேள்வியை கேளுங்கள்.
எப்படியேனும், முழுமையான சரியான விடையை கண்டுபிடியுங்கள்

அந்த விடை உங்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும்.

அந்த தெளிவு சொல்லும் நீங்கள் என்பவர்

பல நன்மை மற்றும் பல தீமைகளின் தொகுப்பே ஆவர் என்று.

இந்த செய்தியை முழுமையாக ஏற்றுக் கொண்டீர்களானால் இதுவரை பிறருடைய நல்ல பக்கத்தை மட்டும் ஏற்றுக் கொண்ட நீங்கள் இன்று முதல் பிறருடைய நல்ல பக்கத்தோடு தீய பக்கத்தினையும் ஏற்றுக் கொள்ள ஆரம்பிப்பீர்.

ஏனென்றால் நம்மைப் போல் தான் அவர்களும் என்ற உண்மையை உணர்ந்து விட்டீர்கள்.

அவர்களைப் போல் நம்மிடமும் பல நல்ல குணநலன்களோடு சேர்ந்து, பல தீய குணநலன்களும் இருக்கிறன்றது என்பதை உணரும்போது, நாம் நமக்கு வழங்கும் மரியாதை, முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கும் வழங்க துவங்குகின்றோம்.

உறவுகள் மலர்கின்றன.

உறவுகள் மகிழ்ச்சியின் ஆரம்பமா கின்றது. மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் வெற்றிகளை வாரி வழங்கும் அட்ஷய பாத்திரமாகின்றது.

3. இயற்கை அன்னையின் தஞ்சம்

சந்தோஷ ஊற்றின் உச்சம்

சந்தோஷமே சாதனை வாழ்வின் ஆதார சுருதி.

இயற்கையை ஒன்றி வாழும் வாழ்க்கை முறையே சந்தோஷத்தின் ஆரம்பம்.

சாதனை பயணம் மேற்கொண்டிருக்கும் அன்பு தன்னம்பிக்கையாளர்களே, உங்கள் வெற்றியின் வேகத்தை அதிகரிக்கும், சந்தோஷத்தை அளிக்க உதவும், இயற்கையோடு இணைந்த வாழ்வு முறையை பற்றி இந்த இதழில் ஆராய்வோம்.

இன்று பல்வேறு நகரங்களில் காலை நேரங்களில் நடைபயில்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காண முடிகின்றது. ஒரு நடைபயில்வோர் சங்க ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றபோது, அந்த சங்க உறுப்பினர்கள் காலையில் நடைபயில்வதனால் கிடைத்து வரும் நன்மைகளை பற்றி கூறிய போது மிகவும் ஆச்சரியம் அடைந்துவிட்டேன்.

ஒருவர் நான் என் 43 வயதில் நீரிழிவு நோயினை கண்டுபிடித்தபோது மருத்துவர் இனி இன்சுன் இல்லாமல் நலமாக இருப்பது கடினம் என்று கூறினார். ஒன்றிரண்டு மாதம் இன்சுன் மருந்து தொடர்ந்து எடுத்து வந்தேன். பின் ஒரு நண்பர் அறிவுரைபடி தினமும் காலை நடை பயில்வதுடன், உணவு முறையிலும் சில கட்டுப்பாடுகளை விதித்து, இயற்கை உணவுகளை அதிகமாக சேர்க்க ஆரம்பித்தேன்.

இப்போது இன்சுன் பயன்படுத்துவது இல்லை. உடல் நலமும் சிறப்பாக இருக்கின்றது என்றார்.

மற்றொருவர் தினமும் காலை நடை பயில்வதுடன், ஒரு தியான வகுப்பில் கலந்து கொண்டு மூச்சுப் பயற்சி, யோகாசனப் பயிற்சிகள் மூலம் என்னை பயமுறுத்திய மனஅழுத்தம் மாயமாய் போய்விட்டது என்று அனுபவபகிர்வு செய்தார்.

இது போன்று அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பல்வேறு பங்கேற்பாளர்களும் நோய், மனஅழுத்தம், குடும்ப உறவுகளில் இருந்த பிரச்சனைகள், என பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷ வாழ்வு வாழ்வதாக கூறியது என் மனக் கண்களை திறந்து விட்டது என்றே கூறலாம்.

இந்த நண்பர்கள் சாதாரணமான, சிறிய அளவிலான இயற்கையை அனுபவித்து வாழ துவங்கியதிலேயே இவ்வளவு நன்மைகள் என்றால், மேலும் அதிகமாக, முழுமையாக இயற்கை வழங்கியுள்ள விலை மதிப்பற்ற, ஒப்பற்ற வழிமுறைகள், செயல்பாடுகள், உணவுமுறைகள், நடவடிக்கைகள், ஒழுக்க முறைகளை பின்பற்றி வாழத்துவங்கினால், நம் வாழ்வில் எவ்வளவு சந்தோஷம் ஏற்படும், என்றென்றும் வசந்தம், வீச ஆரம்பிக்குமே என்ற எண்ணம் தனக்குள் ஏற்பட்டுவிடும்.

அந்த எண்ணத்தின் விளைவே, இயற்கை யுடன் இணைந்து, இயற்கையை அனுபவித்து வாழ என்ன? என்ன? வழிமுறைகள் காணப் படுகிறது என்ற தேடல். அந்த தேடல் கிடைத்த விடைகளே, இத்தொடரின் இப்பகுதி.

ஆகவே உடல் நலம் மற்றும் மனநலம் பேணி முழு சந்தோஷத்துடன் முடிவு செய்த அன்பு தன்னம்பிக்கை வாசகர்களே இயற்கை யோடு இணைந்த வாழ்வுமுறைகளை பின்பற்றுங்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தை கள் உட்பட குடும்பத்தினரின் சந்தோஷ வாழ்வை உறுதி செய்யுங்கள்.

இயற்கையோடு ஒன்றி வாழ்வதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

1. மனநலம் 2. உடல் நலம் 3. சந்தோஷம் 4.மனித உறவுகள் 5. சிறந்த இளைய தலை முறையை உருவாக்கலாம். 6. ஓய்வு 7. குடும்ப நலம் 8. உற்சாகம் ஊற்றெடுக்கும் 9. மன அமைதி 10. நல்ல உறக்கம் 11. நல்ல அனுபவங்கள் 12. நல்லெண்ண அலைகள் உருவாகும் 13. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது 14. ஊடகங்களின் எதிர்மறை தாக்கத்தை குறைக்க முடியும்.

இயற்கையோடு இணைந்து வாழும் வழிமுறைகள்

கீழ்கண்ட இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் வழிமுறைகளை பின்பற்ற துவங்கினால் சந்தோஷம் நிச்சயம். சந்தோஷம் நம் வாழ்வில் அனைத்துச் செல்வங்களுக்கும் வழிவகுக்கும். இப்போது இயற்கையோடு இணைந்து சந்தோஷம் பெறமுடியும் சில செயல்களை பார்ப்போம்.

அ) கிராமப்புறசூழல் கொண்ட இடங்களில் வாழ்வது நலம் பயக்கும். ஏனென்றால் சுத்தமான நீர், காற்று, விளைபொருட்கள் கிராம சூழல் கொண்ட பகுதிகளில் கிடைப் பதனால், உடல்நலத்தை பேணிக்காக்க முடிகின்றது.

ஆ) வீட்டை சுற்றிலும் காய்கறி தோட்டம், பூந்தோட்டம், வேம்பு போன்ற மரங்களை வளர்ப்பது வீட்டின் சுற்றுப்புறசூழலை இயற்கை யானதாகவும், நலம் பயக்கும் விதமாகவும் மாற்றுகிறது.

இ) முடிந்தால் மாதம் ஒரு முறைஅல்லது 6 மாதம் ஒரு முறைஉங்கள் ஊர் அருகில் இருக்கும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, காள ஹஸ்தி, மாஞ் சோலை, மூணாறு, பொன்முடி, நெல்யாம்பதி, வால்பாறை, கோவை குற்றாலம், வெள்ளியங்கிரி மலை அல்லது ஏதேனும் மலைப்பகுதிகளுக்கு சென்று வருவது நலம் பயக்கும். இப்பகுதி களுக்கு செல்லும் போது பாதுகாப்பான அடர்ந்த காடுகளில் முடிந்த அளவு அதிக நேரம் அமைதி யாக நடந்து (முடியா விட்டால் வாகனங்களில்) பயணம் செய்யுங் கள். ஆடிப்பாடி மகிழுங்கள். புதிய உலகத்திற் குள் பிரவேசித்த பரவசத்தை உணர துவங்கு வீர்கள். சந்தோஷம் பீறிட்டு வருவது உறுதி.

ஈ) ஆறுகளில், அருவிகளில், இயற்கை எழில் மிக்க நீர்நிலைகளில் அவ்வப்போது ஒரு இன்ப குளியல் போடுவது மகிழ்ச்சிப் பெருக்கில் இட்டுச் செல்லும்.

உ) பூங்கா, மிருககாட்சிசாலை, கடற்கரை, சுற்றுலாத் தளங்கள், ஆலயங்களுக்கு சென்று வருவதனால், ஓரளவு இயற்கையை அனுபவிக்கும் வாய்ப்புடன், மனதிற்கு சந்தோஷமும் கிடைப்பது உறுதி.

ஊ) புல்தரைகளில், மணல் பரப்பில், புரண்டு எழுங்கள். இயற்கையை அனுபவிப்பதோடு, இதமான மென்காற்று உங்களுக்கு உடல் நலத்தை வழங்குவதுடன், மன நலத்தையும், சந்தோஷத்தையும் உருவாக்க உதவுகின்றது.

எ) நேரம் கிடைக்கும் போது (குறிப்பாக இரவு நேரங்களில்) வெட்ட வெளியில் அமர்ந்து கொண்டோ (அ) படுத்து கொண்டோ வான்வெளியில் பார்வையை செலுத்துங்கள். விண்மீன்களை எண்ணுங்கள். விண்வெளி யின் கொள்ளை அழகை அணுஅணுவாக அனுபவியுங்கள்.

ஏ) தெளிவான நீரோடை கரைகளில் கால்களை நனையும்படி அமர்ந்து நீரோட்டத்தை கண்டு ரசியுங்கள்.

ஐ) நீர், ஓடை அல்லது நீர் நிலைகளில் மீன் பிடிப்பதற்கு வாரம் ஒருமுறை ஒதுக்குங்கள்.

ஒ) வளர்ப்பு பிராணிகள், பறவைகளை கண்டு, உணவளித்து மகிழ மனது வையுங்கள்.

ஓ) கடற்கரையில் அமர்ந்து கடல் அலைகளின் ஆரவாரத்தை அசை போடுங்கள்.

மேற்கண்ட வழிமுறைகளோடு, தினம் தினம் இயற்கையோடு இணைந்து வாழ வீட்டைச்சுற்றி காய்கறி தோட்டம், பூந் தோட்டம், மென்காற்றை வழங்க உதவும் மரங் களை உருவாக்குவதுடன், மீன், வண்ணமீன்கள், பறவைகள், வண்ணப்பறவைகள், வீட்டு விலங்கு களையும் வளருங்கள். இயற்கையான சூழல், உடல்நலம், மனநலம், பொருளாதார அபி விருத்தி யுடன் சந்தோஷமும் பொங்கிப்பெருகுவது உறுதி.

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

இன்பம் தரும் சந்தோஷத்தை அணைத்து மகிழ்வோம்.

மேலும் சந்தோஷத்திற்கான வழிமுறைகள்

அடுத்த இதழில்…