![]() |
Author: ஆசிரியர் குழு
|
கடந்த ஆண்டில் நிகழ்ந்த நிகழ்வுகள் நமக்கு ஏற்றங்களையும் மாற்றங்களையும் அவசியம் தந்திருக்கும். எதுவாயினும் நல்லவைகள் மட்டும் எப்போதும் நமக்குள் இருந்து வெற்றிக்கு வழிகாட்டட்டும்.
இந்த 2010 புத்தாண்டு நமக்கு தருவது புதுப்பொலிவாக இருக்கட்டும்.
இலக்குகள் நோக்கிய பயணத்தில் தடைகள் தகர்த்தெறியப்படட்டும்.
இயலாது; முடியாது என்பவையெல்லாம் இல்லாது ஒழிந்து போகட்டும்.
எவர் கண்ணில் பட்டாலும் அட! இவரா! சாதிப்பாளராச்சே… வீடும் நாடும் போற்றும் வண்ணம் எல்லோர் வாழ்விலும் சாதிப்புகள் கூடட்டும்.
முடியாதவைகள் எல்லாம் முயலாததால்தான் என்பதை உணர்ந்து உழைப்பே உயர்வின் மூச்சாகட்டும்.
தன்னம்பிக்கையாளர்களுக்கும், மேலும் தன்னம்பிக்கை வளர துணை நிற்கும் படைப்பாளிகள், படிப்பாளிகள் விளம்பரதாரர்கள் என அனைவருக்கும் எங்களது
மனம் நிறைந்த 2010 புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ஆசிரியர் குழு
- None Found






