ஒரு நாடோ அல்லது தனி மனிதனோ செல்லும் வழியை வைத்து தான் முன்னேற்றம் பின்னடைவு யூகிக்கப்படுகிறது. அந்த வழியில் கலாச்சாரமும் பெரும் பங்கு வகிக்கிறது.

கலாச்சாரத்தினால் வரும் சீரழிவுகள் அந்த நாட்டையும் தனி மனிதனையும் பாதிக்கும் அபாயம் கொண்டது. அமெரிக்காவில் “மிசிசிபி” மாகாணத்தில் திருமணம் ஆகாத இளம் தம்பதியினருக்கு முதல் மகளாக பிறந்தவர் இவர். ஆப்பிரிக்க, அமெரிக்கர் கருப்பினத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாயார் வீடுகளில் வீட்டு வேலை செய்பவர். தநதை அமெரிக்காவின் ஆயூத தளவாட பிரிவில் பணி புரிந்தவர். இவருடைய தந்தையும் தாயும் பிரிந்தே வாழ்ந்தனர். இவர் தாயார் வறுமையிலும், ஏழ்மையிலும் வாடிய தால் தன் தாயை பெற்றபாட்டியின் அரவணைப் பில் இவர் வளர்ந்தார். இவருடைய 3வது வயதில் ‘பைபிளில்’ உள்ள வசனங்களை மனப்பாடம் செய்ய சொல்லி (அந்த ஏற்ற இறக்கங்களுடன்) அதை எல்லோர் முன்னிலையிலும் அவர்கள் வழிபாடு நடத்தும் ‘சர்ச்சிலும்’ சொல்ல செய்வார் இவர் பாட்டி. இதன் மூலம் பலரின் பாராட் டையும், நன்மதிப்பையும் பல பரிசுகளையும் மூன்று வயதிலேயே இவர் பெற்றார். 7 வயதிலிருந்து 13 வயதுவரை தன் தாயின் அரவணைப்பில் இவர் வளர்ந்தார். எந்த பெண் குழந்தைக்கும் கனவில் கூட நேரக்கூடாத கேட்கும் பொழுதே வேதனையளிக்கும் சம்பவம் இவர் வாழ்வில் நடந்தது. இவருடைய 9 வயதில் இவருடைய சித்தப்பா, மாமன், இவர் உறவினர்கள் மற்றும் இவர் தாயாரின் ஆண் நண்பர்கள் இப்படி பலராலும் இவர் மாறி மாறி கற்பழிக்கப்பட்டார். தனக்கு நடந்த கொடுமையை எப்படி வெளிப்படுத்துவது என்று கூற இவருக்கு தெரியவில்லை. தன்னுடைய உணர்வுகளை மனதிற்குள்ளேயே வைத்து புழுங்கினார். அடக்கப்பட்ட உணர்வுகள் கோப மாகவும், மூர்க்கமாவும், பிடிவாதமாகவும் வெளிப் பட்டது. (அடக்கப்பட்ட உணர்வுகள் இதுபோல் வெளிப்படுவது இயற்கையே என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்)

இவருடைய பிடிவாத குணத்தால் இவர் தாயாருக்கும் இவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. வீட்டில் இருக்கும் பணத்தை திருடிக்கொண்டு வீட்டை விட்டு ஓடினார். இவர் ஆறுதல் என்ற பெயரில் அப்பொழுதும் பல ஆண்களால் கற்பழிக்கப்பட்டார். இவருடைய 14 வது வயதில் கர்ப்பம் அடைந்தார். ஓர் ஆண் குழந்தையை பெற்றார். அந்த குழந்தை இரண்டு வாரங்களிலேயே இறந்தது. இந்த நிலையில் இவர் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? மேற்கொண்டு இவர் வாழ்ந்தால் எப்படி வாழ்ந்திருப்பார்?

இந்த கேள்விகளுக்கு நம் ஒவ்வொரு வருக்கும் பல அனுமானங்கள் இருக்கலாம்.

14வது வயதில் இருந்து தன் தந்தையின் அரவணைப்பில் இவர் வளர்ந்தார். தந்தையின் கண்டிப்பு, அதே சமயம் அன்பு, அளவான சுதந்திரம், மெல்ல மெல்ல அவர் மனதை மாற்றியது. அவர் தந்தை மீண்டும் அவரை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். அவரும் கல்வியில் சிறந்து விளங்கினார். தன் மகளுக்கு சுய முன்னேற் றம் மற்றும் தத்துவ புத்தகங்கள் கொடுத்து படிக்கச் செய்தார். அவர் தந்தை மேலும் புத்தகங்களில் படித்த கருத்துக்களை ஓர் அறிக்கை போல் தயார் செய்து அந்த வாரங் களின் இறுதியில் தனக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் புத்தகங்களில் படித்த கருத்துக்களை தன்னிடம் தினமும் வாய்மொழியாகச் சொல்ல வேண்டும் என்றும் தன் மகளுக்கு கட்டளை யிட்டார். மகளும்அந்த கட்டளையை நிறை வேற்றினார். தன்னுடைய 16 வது வயதில் தனியார் வானொலி நிலையத்தில் பகுதிநேரப் பணியில் செய்தி வாசிப்பவராக வேலைக்கு சேர்ந்தார். வேலை செய்து கொண்டே பல்கலைக்கழக பட்ட படிப்பு முடித்தார். இவருடைய 19 ஆம் வயதில் தனியார் தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாள ராகவும் செய்தி வாசிப்பவராகவும் நிரந்தர பணியில் சேர்ந்தார். கருப்பர் இனத்தை சேர்ந்த முதல் பெண் செய்தி தொகுப்பாளர் என்ற பெருமையும் பெற்றார். அந்த வேலை அவருக்கு பெரிதும் மனச்சோர்வு ஏற்படுத்திய போதும் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை இனிமையான புன்னகையோடும் அனுபவித்தும் செய்தார்.

1984ஆம் ஆண்டு சிகாகோவில் உள்ள வேறு ஒரு தனியார் தொலைக்காட்சியல் அதிகாலை சிகாகோ (A.M.Chicago) என்று மக்களோடு தொடர்பு கொண்டு பேசும் (Talk Show) நிகழ்ச்சியை அவரே இயக்கி தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்காக விருதும், பாராட்டும் பெற்றார். பிற்காலத்தில் இந்த நிகழ்ச்சி இவர் பெயராலேயே அழைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கண்டு களித்த இவர் ரசிகர்களின் எண்ணிக்கை 2 கோடி.

அமெரிக்க நாட்டின் பல உயரிய விருது களை பெற்றிருக்கிறார். இவர் நடத்தும் பஹப்ந் நட்ர்ஜ்-க்களில் மக்கள் மனதில் உள்ள உணர்வு களை மிக யதார்த்த மாகவும் அதே சமயத் தில் தன் மனதில் உளள கருத்துக் களை வெளிப்படை யாகவும் நேர்த்தி யாகவும் கூறுவதால்தான் இவருடைய Talk Show-க் கள் தொடர்ந்து வெற்றி பெறுகின்றன என்று அந்த நாட்டு கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இப்பொழுது இவர் தயாரிப்பாளர், நடிகை, பத்திரிக்கையாளர் என்று பல அவதாரம் எடுத்து விட்டார். “ஜுராஸிக் பார்க்” படத்தை இயக்கிய “ஸ்டிபன் ஸ்பில்பெர்க்” படத்தில் நடித்திருக்கிறார். சிறந்த நடிகை விருதும் பெற்றிருக்கிறார்.

தன் வாழ்க்கையின் அனுபவம் பற்றி அவர் கூறும்பொழுது தன்னுடைய மூன்றாவது வயதில் தன் பாட்டி தனக்கு அளித்த பயிற்சியே தான் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த வாழ்க்கையின் அடித்தளம் என்றும், அதற்காக தன் பாட்டிக்கு நன்றியும் கூறுகிறார். தன் தந்தையின் வழிகாட்டுதலில் தான் கற்ற புத்தகங்கள் தன்னை சாதிக்க வைத்தது என்றும் மனம் நெகிழ்ந்து கூறுகிறார் இவர்.

அமெரிக்காவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க இவர் கூறிய யோசனை களையும், கருத்துக்களையும் அமெரிக்கா சட்ட வல்லுநர்கள் குழுவால் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. (கூடிய விரைவில் அவை சட்டங் களாகும்) இவருடைய இந்த கருத்துக்களுக்கு அங்கீகாரம் அளித்தவர் அமெரிக்க முன்னாள் அதிபர் ‘பில் கிளின்டன்’.

‘டைம்ஸ்’ பத்திரிக்கை இந்த நூற்றாண்டின் சிறந்த பெண்மணி என்று இவருக்கு புகழாரம் சூட்டி உள்ளது.

அமெரிக்காவின் பணக்கார பெண்மணி என்று இவர் அழைக்கப்படுகிறார்.

இவருடைய சொத்து மதிப்பு 13,600 கோடி.

என் வழி சாதனை வழி என்று உணர்த்திய இந்த மங்கையின் பெயர் ‘ஓப்ரா வின்ப்ரே’

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்!

- பாரதி