![]() |
Author: தி.வீ. தினேஷ் DECE
|
இளைஞர்களே உலகம் உங்களை
உற்றுப்பார்க்க முயற்சியை முடுக்கிவிடுங்கள்
முயலாதவன் இயலாமைக்கு உடையவன்
தோல்விக்கு அழுபவர்கள் வெற்றிக்கு தவறானவர்கள்
இளைஞர்களே வேர்வைத் துளியில்
சூரியனின் வெப்பத்தை மிஞ்சிடுங்கள்
இமயத்தின் உச்சியில் நறுமணம்
மணக்கும் நந்தவனம் வளர்த்துங்கள்
விஞ்ஞானப் பார்வையில் பாலைவனத்தை
பசுமை படரும் நிலமாக்குங்கள்
வெட்டியெடுக்கும் தங்ககட்டிகள் நெருப்பில்
முங்கியெடுக்கையில் ஆபரணமாக உருவாகும்
இலட்சியத்தை முயற்சி நெருப்பில்
முங்கியெடுக்கையில் சாதனையாய் உருமாறும்
தன்னம்பிக்கையையும் முயற்சியையும் வலையாய்
மூச்சுள்ளவரை வீசிக்கொண்டே இருங்கள்
ஒருநாள் உலகத்தை தன்வசப்படுத்துவீர்கள்!
- தி.வீ. தினேஷ் DECE
பாலப்பம்பட்டி, உடுமலை
Similar Post:
- None Found






