சுபிட்சம்காண சுதந்திரக் காற்றைசுவாசி
வாழ்க்கைப் புத்தகத்தை வரிவிடாமல் வாசி
மனிதநேயத்தை மறந்திடாமல் நேசி
மதியோடு வாழ்ந்தால் மனத்துயரோ தூசி
கொண்டகடன் யாவும் குத்துகின்ற ஊசி
கொண்டவளை எந்நாளும் குறிப்பறிந்து நேசி
செயல்தான் தொடங்குமுன் சீர்தூக்கி யோசி
அனைத்துயிரும் அகம்மகிழ அன்புமொழி பேசி
அறவழியில் நடந்திட்டால் நாம் பெறலாம் ஆசி
- கவிச்சுடர் இளங்கதிரவன்
கோவை – 38