தங்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக ஏதாவது ஒரு விஷயம் நடந்துவிட்டால், உடனே அவர்களைப் பயம் பற்றிக் கொள்கிறது. தங்களுடைய அனுபவக்குறைவு காரணமாக இப்படி நேர்ந்திருக்கக்கூடும் என்று நினைத்துப் பார்க்கக்கூட அவர்களுக்குத் தோன்றுவது இல்லை. பயம் வந்துவிட்டால், நம்பிக்கை குறைந்து விடுகிறது.
பயம் ஏன் வருகிறது? அறியாமைதான் நமது அச்சத்துக்கு ஆணி வேர். நமது துன்பத்துக்கும், துயரத்துக்கும் தூண்டுகோலாக இருப்பதும் அறியாமைதான். இருட்டில் என்ன இருக்கிறது என்று எதுவுமே தெரிவதில்லை. அந்த அறியாமை, இருட்டைப் பார்த்தாலே பேய் இருக்குமோ, பிசாசு இருக்குமோ என்று பயப்பட வைத்துவிடுகிறது.
அறியாமையை அகற்ற பயத்தை எதிர் கொள்வதுதான் ஒரே வழி. நம்பிக்கை தானாக வந்துவிடும்.

டாக்டர். கோ. இராமநாதன், எம்.டி.,