சூரியனுக்கு எதிரேதான்
வானவில் பிறக்கிறது
நாற்றுக்கு எதிரேதான்
பட்டம் வானில் பிறக்கிறது
துன்பம் வந்தால்
எதிர்த்து நில்
துயரம் வந்தால்
நிமிர்ந்து நில்
தோல்வி வெள்ளம் வந்தால்
எதிர்நீச்சல் போடு
போராடு நிச்சயம்
வெற்றி உன்னைத் தேடி வரும்

கவிஞர் ஞானசித்தன்
சென்னை