![]() |
Author: வேங்கடலட்சுமி ராமர்
|
இறந்தவரை
எரிப்பதா…
புதைப்பதா…
மின்மயானத்தில் ஏற்றுவதா…
என்பதெல்லாம் கிடக்கட்டும்!
உயிருடன்
உனக்குள் இருக்கும்
உன்னதத்தைப் புரிந்துகொள்!
முடைநாற்றம் வீசும்
மூடநம்பிக்கையை எரி!
‘என்னால் முடியாது’ என்று
முடங்கிக் கிடக்கும்
அவ நம்பிக்கையைப் புதை!
‘மாற்றுவழி தேடுகிறேன்’
என்று போதையைப்
பாதையாக்கிக் கொண்டு,
தரங்கெட்டுப் போன
தன்மையை
மின்மயானத்தில் ஏற்று!
பொசுங்கிப்
பிடிசாம்பலாகட்டும்!
இனி
இருக்கும் வரை…
நீ
செய்வதை யோசி!
- தேன்தமிழ்ச்சுடர் வேங்கடலட்சுமி ராமர், சென்னை.
Similar Post:
- None Found






