![]() |
Author: டாக்டர் கோ. இராமநாதன்
|
அடுத்தவர் நம்மைத் திட்டும்போது அந்த பேச்சுக்களை நாம் எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அவை நம்மை அடைந்தவுடன் நமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அதன்பின் அந்த பேச்சுக்களையும், அவமரியாதைகளையும் நமக்குத் தகுந்த மாதிரி மாற்றிக் கொள்வது என்பது நம் கையில்தான் இருக்கிறது.
அடுத்தவர் நமக்கு இழைக்கும் அவமானங்களை, காயங்களாக ஏற்றுக்கொண்டால், நாம் எப்போதும் துன்பப்பட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும். நம்மை யாராவது ‘முட்டாள்’ என்று திட்டிவிட்டால் நிச்சயம் நமக்கு வலிக்கத்தான் செய்கிறது.
உண்மையிலேயே நாம் முட்டாள் எனில், மற்றவர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் முகம் கோணுவதற்கான அவசியமே இல்லை. முட்டாள் என்பது பொய் எனில், அப்போதும் வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை. ஒரு பொய்; யாரோ ஒருவர் பொய் சொன்னதற்காக நாம் ஏன் பாதிப்படைய வேண்டும்?
டாக்டர். கோ. இராமநாதன், எம்.டி.,
- None Found







Excellent!… Keep it up.