![]() |
Author: ஆசிரியர் குழு
|
அ. பிரமநாயகம், கோவை – 8
ஜுன் மாத தன்னம்பிக்கை இதழில் வந்த அனைத்து கட்டுரை களும் வாசகர்களின் தன்னம்பிக்கையை மென்மேலும் வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக “மண்ணை மாதவன்” அவர்களின் அ… அ…. பற்றிய விளக்கம் மிகவும் அருமை. “வங்கியில் இருந்து நாம் பணம் எடுக்கும் போது நம் சேமிப்பு கணக்கில் பணம் குறையும். அன்பு என்னும் வங்கியில் நம் அன்பை மற்றவர்களுக்கு கொடுக்க கொடுக்க அன்பு மேலும் வளரும் என்ற கருத்து தற்போதைய சூழலுக்கு மிகவும் அவசியமாகும்.
நா. காளிதாசன், காசிபாளையம், கோபி.
ஜுன் 2009 “தன்னம்பிக்கை” மாத இதழில் வந்த அனைத்து தொகுப்புகளும் மிகவும் அருமை.
* சூரியன் அவர்களின் “பண சிக்கல் வராமல் இருக்க” கட்டுரை திட்டமிட்ட செலவு, சிக்கனமான சேமிப்பு போன்ற நல்ல கருத்துக்களை உள்ளடக்கி இருந்தது.
* திரு. ராஜா M. சண்முகம் அவர்களின் நேர்முகம் வளரும் இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தது.
* மேலும் சி.ஆர். செலினின் வெற்றிப்படிக்கட்டுகள்,
எ.த. சுப்பிரமணியன் அவர்களின் புரிந்து கொள்ளுங் கள், பாலாவின் பொக்கிஷங்கள், திரு. செ. சைலேந்திர பாபு அவர்களின் உணவு பழக்கங்கள், மெர்வின் அவர்களின் பழக்கம் வெற்றியின் முழக்கம், திரு.த.முருகேசன் அவர்களின் மாற்றத்தின் மறுஉருவம் வெற்றி போன்ற அனைத்து தொகுப்பு கட்டுரைகளும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அ. சம்பத், திருவரங்கம்.
மண்ணை மாதவனின் அ.அ. கட்டுரை அட, அட, என வியக்க வைத்து விட்டது.
பிரபாலிங் கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.
ஆரோக்கியமான உணவு வகைகளை ஆரோக்கியமாக உண்பது எப்படி? பயனுள்ள கட்டுரை. ஒவ்வொருவரும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல நிகழ்வுகளைச் சொல்லி சுகமான வாழ்வு வாழ வழிவகுத்திருக்கும் ‘தன்னம்பிக்கை’யின் பணி போற்றத்தக்கது.
ஹலிக்குல்ஜமான்
அமைப்பாளர், தன்னம்பிக்கை வாசகர் வட்டம், சீர்காழி.
‘தன்னம்பிக்கை’ மாத இதழின் 20வது ஆண்டு விழாவிற்கு எங்கள் ‘வாசகர்’ வட்டத்தின் நல் வாழ்த்துக்கள்.
ஆர்.கே. லிங்கேசன்
மேலகிருஷ்ணன்புதூர்
புரிந்து கொள்ளுதல்’ அதன்படி நடந்தால் வாழ்க்கை சிறக்கும் என்பதை ‘புரிந்து கொள்ளுதல்’ கட்டுரை நயமாகவே எடுத்துச் சொல்லியது. புரிதலுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அவசரப்படாமல் அனுசரித்து வாழ்ந்தால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்பது பேருண்மை.
கவிஞர் நிலவுசேகரன்
அம்மாபேட்டை, சேலம்.
‘தன்னம்பிக்கை என்னும் தாமரையே – நறுந்
தமிழ்ப்பொழில் நடுவே தனிமலர்நீ!
பொன்னின் மேலாம் சிந்தனையை – சுடர்ப்
புதுமை கொழிக்கத் தருகின்றாய்!
இருபதாம் ஆண்டைக் காண்கின்றாய் – உன்
இணையிலாச் சிறப்பின் அடையாளம்!
பெருமித மாகத் தொடர்ந்திடுக! – தமிழ்
பேசும் உலகம் வரவேற்கும்!
கோவை முருகேசன்
பீகார் மாநிலத்தில் மலையை உடைத்த ‘தஸ்ரத் மஞ்சியின்” கதை உணர்ச்சிபூர்வமாக இருந்தது. இது போல் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பது இந்தியாவுக்கே பெருமை. இதை தன்னுடைய கடடுரையில் வெளிப்படுத்திய “மண்ணை மாதவன்’ அவர்களுக்கு நன்றி.
இரா. தியாகராசன், இலால்குடி.
‘வெற்றிப் படிக்கட்டுகள்’ அருமை. புரிந்து கொள்வது எப்படி என இராமன், இராவணன், துரியோதனன், பாண்டவர்கள், புத்தர் செயல் ஆகியவற்றைக் கூறி விளக்கியது அருமை. செல்வ வளம் இருந்தாலும் எழுதும் பேனாவின் சிறப்பு பற்றிக் கூறியது அருமை.
காணாமல் போன கடிதக்கலை பற்றி மனோகரன் விளக்கும் போது நேரு, இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் பற்றிக் கூறியது மறக்க முடியாதது. அன்பின் தத்துவம் பற்றிய விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
வே. காயத்ரி, ஜோதிபுரம், கோவை.
கடந்த ஆறு, ஏழு மாதங்களாகத் தான் நான் தன்னம்பிக்கை இதழைப் படித்து வருகிறேன். ஆசிரியர் குழுவின் ஒப்பற்ற பணிகளுக்கு எனது வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன். எத்தனையோ மாத இதழ்கள் முளைத்திருக்கும் இந்நாளில், தனிச்சிறப்புடன் சமுதாயத்திற்கு, குறிப்பாக, இளைஞர்களுக்கு, முக்கியமான தன்னம்பிக்கையை மேலும் வளர்க்க உதவி வரும் ‘தன்னம்பிக்கை’ இதழுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
இந்த இதழில் எழுதும் ஒவ்வொருவரின் எழுத்துக்களும், சமுதாயத்திற்கு சிறந்த கருத்துக்களாக வந்தமைகின்றன.
இந்தியா வல்லரசாக மாறவேண்டும். அது இளைஞர்களின் கையில் உள்ளது. அவர்களுக்கு தேவையானவற்றுள் ‘தன்னம்பிக்கை’யும் ஒன்று.
ஓ. சங்கர், வேலூர்.
தன்னம்பிக்கை மாத இதழ் வாசித்து, எனது வாழ்வை புது தெம்புடன், தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறேன். இதற்கு நன்றிகள் பல!
சங்கமித்ரா, வண்டலூர் வாயில், சென்னை.
தன்னம்பிக்கை இதழ் 20ம் ஆண்டு விழாவைக் கொண்டாடி யிருப்பது இதழாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. தன்னம்பிக்கை ஊக்குவிப்பாளர்களுக்கு மிகப்பெரிய வெற்றி. 20ம் ஆண்டு வெற்றிக்குப் பின்னால் உங்களுடைய தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்திருப்பதை உணர வேண்டும்; பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள்.
M. சிவகண்டன், கோ. பவழங்குடி
இம்மாத இதழில் வெளியான செய்திகள் அனைத்தும் மிகவும் அற்புதம். குறிப்பாக, உயர்திரு. சைலேந்திரபாபு, அவர்களின் உடலினை உறுதிசெய் என்ற தலைப்பில் குறிப்பிட்டிருந்த உணவுப்பொருள் கட்டுப்பாடு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நாம் செய்யும் சிறு தவறுகள் கூட மிகப்பெரிய பொருளாதார தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் என்பதை உணர முடிகிறது.
மேலும், சுயலாபம் கருதி நாளேடுகளும், வார, மாத இதழ்களும் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், “தன்னம்பிக்கை” போன்ற தரமான மாத இதழ்களை ஒவ்வொரு இளைஞனும், ஒவ்வொரு குடிமகனும் படித்து வந்தால், அது நிச்சயம் ஒரு பெரும் மாற்றத்தை இந்தியாவிற்கும், உலகிற்கும் அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- None Found






