![]() |
Author: ஆசிரியர் குழு
|
அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற பட்டப்படிப்போடு, தொழில் நுட்ப படிப்பில் சான்றிதழ் பெறும் திட்டம் இந்த ஆண்டு அனைத்து அரசு கல்லூரிகளிலும் செயல்படுத்தப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் மிகக்குறைந்த கட்டணத்தில் தொழில்நுட்ப சான்றிதழ் வகுப்புகளில் சேரலாம் என அரசு அறிவித்திருக்கிறது.
மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பைப் பெற பட்டப்படிப்பு மட்டுமே உதவும் என்றில்லாமல், தொழில் நுட்ப படிப்பையும் சேர்த்து படித்துக் கொள்ளும்போது பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்புகளை சுயமாக உருவாக்கிக் கொள்வதிலும் அதிகம் பயன்பெற முடியும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. அதேபோல் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை மட்டுமே செலுத்தியும் தவறான முறைகளில் கல்லூரிகளில் இடம்பெற முயற்சிகளை மேற் கொள்வதையும், கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி /கல்லூரி களை முறையாக உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் கல்வியின் தரத்தை உயர்த்த மாணவர்களும் / பெற்றோர் களும் முன்வரும்போதுதான் எல்லாருக்கும் தரமான கல்வி ஏற்றத்தாழ்வின்றி கிடைக்கும்.
அன்புடன்,
ஆசிரியர் குழு
- None Found






