….. கடற்கரை மணலில்
காணக் கிடைப்பது இல்லை வெற்றி!
அடி மணலில்
ஆழப் புதைந்திருப்பதே வெற்றி!
தடைகளாய் கற்களும்
கரும்பாறைகளும் வரத்தான் செய்யும்
வெற்றி கைகளில் கிட்டும் வரை
தோண்டியெடுத்திடு தோழா!
விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம்
முட்டி மோதி மண்ணைத் துளைக்கவில்லையா?
ஒரே நாளில் விண்ணைத் தொடா விட்டாலும்
வளர்ந்து கனிகள் தருவதில்லையா?
தோழ்வி யெனும் வார்த்தை கூட ஏது தோழா?
கடற்கரை மணலில்
காணக் கிடைப்பது இல்லை வெற்றி!
அடி மணலில்
ஆழப் புதைந்திருப்பதே வெற்றி!
பாதி மணல் தோண்டிய பின்
பாதியில் விட்டு விடாதே தோழா!
கைக் கெட்டும் தூரம் தான் வெற்றி!
அனுதினமும் நினைவு பட்டறையினை
அறிவுக் கூர் பாய்ச்சிடு தோழா!
கூர் பாய்ச்சிய உன் கூரிய மூளையில்
வெற்றிப் புதையல் தோண்டி யெடுத்திடலாம்
விரைவில் எடுப்பதும் விரைந்து எடுப்பதும்
உன் கைகளில் தோழா!

- சு. ஜெயபாரதி, ஆறுமுகநேரி