![]() |
Author: ப. யோகதா
|
இனிய தன்னம்பிக்கை வாசகர்களுக்கு புன்னகை வாழ்த்துக்கள்! கட்டுரையை படிபது மட்டும் அல்லாது கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை வாழவில் நடைமுறைப்படுத்தி வாழ்வதை பழக்கமாகி வாழும் அனைவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள். புனகைத்தோற்றமும், இனிமைச்சொற்களும் மெய்யான வாழ்கைக்கு மிகவும் அவசியம். இந்த மாதம் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை விட நாம் வாழும் வாழ்க்கை சிறந்ததா? இல்லையா என்பதைப் பற்றியே.
பழையது என்ற வார்த்தை தோன்றிய காரணம் புதிய புதியவைகள் தோன்றியதே பழையதையே சிறிய மாற்றத்தோடு காணுகையில் புதியதாகி விடுகிறது. ‘வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ என்பதை அனைவரும் அறிவோம். அறிந்தும் எத்தனை பேர் சிரிக்கிறோம்? மிக சிலரே. இதன் விளைவு நிறைய சிரிப்பு கிளப் உருவாகியுள்ளது. இன்றைய சூழலில் சிரிப்பு என்பது மிக மிக அவசியமாகி விட்டது. கட்டாயமாக ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது மனம் விட்டு சிரிப்பது மனதிற்கும் சரி உடலுக்கும் சிரி ஆரோக்கியத்திற்கு மிக மிக அவசியமாகிறது. சிரிப்பு கிளப் என்பது பெரியவர்களுக்கு மட்டும் அல்ல. அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
ஏனெனில் ஒவ்வொரு வயதிற்கு ஏற்றாற்போல் பிரச்னைகள் (டென்ஷன்கள்) மன இறுக்கங்கள், மன அழுத்தங்கள் ஏற்படுகிறது. எனவே குடும்பத்திலேயே அனைவரும் சிரிப்பது உறைவை மேம்படுத்தும். வாழ்க்கைப் பயனை அடையவும் உதவும்.
இப்பொழுது ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையானது மிகவும் குறுகி விட்டது. அன்று வீடு நிறைய மனிதர்கள் கருத்துக்களை பரிமாறுவதிலிருந்து அனைவரும் ஒன்று கூடி விழாக்களுக்கு செல்லும்வரை ஒற்றுமை தெரிகிறது. இன்றோ இருப்பது இரண்டு பேர். இருவருக்கும் தனிப் பட்ட விருப்பம், எதிர்பார்ப்பு, கனவு இதில் ஏதேனும் தடைப்பட்டால் மனக்கஷ்டம்முடிவு தனித்தினி தீவு அக்கறை இன்மை நிவலுகிறது. இதுவே கூட பெரியவ்கள் இருப்பின் அவர்கள் இப்படி வினவுவர் ‘என்ன ஆயிற்று? என்ன பிரச்சனை? ஏன் மௌனம்?’ என்றெல்லாம். உடனே பதிலளிக்க முடியாவிட்டாலும் சற்று நேரம் கழித்து மனம் திறந்து கூறவாய்ப்பு உள்ளது. ஆறுதல் கூறவும், யார் மீது தவறு, எது சரி என்றெல்லாம் நமக்கு உணர்த்தவும் அவர்கள் முற்படுவர். பிறகு நம்மால் சிந்திக்க முடிகிறது. தெளிவாக இருந்தால் அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கவும் செய்வோம்.
இன்று பெரும்பான்மையானவர்கள் கூறக்கேட்டிருப்போம். பெரியவ்கள் ஏதேனும் கூறுகையில் ‘உங்களுக்கு என்ன தெரியும் நீங்க அந்த காலத்து ஆளு, இப்ப இருக்கிற உலகம் பற்றி என்ன தெரியும், அனைத்திலும் போட்டி, பொறாமை, டென்ஷன். நான் செய்கின்ற வேலையை நீங்கள் செய்து பார்த்தால் தான் தெரியும் என் நிலையை என்று உடனே மறுத்தது பேசுவதை, அன்று ஒரு குடும்பத்தில் குறைந்தது பத்து நபர்கள் இருப்பார்கள். அதில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே சம்பாதித்தது குடும்பத்தை நடத்துவர். வாங்கும் சம்பளம் செலவுக்கு போக சிறிது தங்கினால் ஆச்சரியம். ஆனால் இன்றோ, ஒரு வீட்டிற்கு வீட்டில் உள்ள அனைவருமே சம்பாதித்தாலும் போதுமானதாக இல்லை. காரணம் ஏன்?
- சேமிப்பின்மை
- எல்லை மீறிய ஆசை (பணம்,பொருள்)
- ஒப்பீடு
- கவுரவ்
- தேவையற்ற செலவு
- ஆரோக்கியமற்ற உணவுகளின் வருகையும், அதிகமான விலையும்
சிந்தித்து பார்த்தால் அன்றைய கடமைகளை விட இன்றைய கடமைகள் மிக சிறியது தான். பாரங்கள் இல்லை. குடும்பக்கவலை அதிகமில்லை. நாம் நினைத்தால் நிச்சயம் அனைவருமே மிக மிக சந்தோஷமாய், மன நிறைவாய், வாழ்கையை வழி நடத்தலாம். இதோ ஓர் சிறிய கற்பனை.
குடும்பம்
நபர்கள் : மூன்றுபேர் (கணவன், மனைவி, குழந்தை)
ஒரு நபர் சம்பளம் : ரூபாய் ஐந்தாயிரம்
இரு நபர் சம்பளம் : ரூபாய் இருபதாயிரம் வரை
செலவுகள் : வீட்டுச் செலவு கல்விச் செலவு
வீட்டுச் செலவு
மின்சாரம், தண்ணீர், உணவு, உடை, வாகனம், வீட்டு வாடகை -பெரும்பாலும் இவைகளே.
வாரத்தில் ஏழு நாட்கள்
கல்யாணத்திற்கு பிறகு
குழந்தைக்குப் பிறகு என இருவகைகளாக பிரித்துப் பார்ப்போம்.
குழந்தைகளுக்கு முன் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்யலாம். ஏழாவது நாளை வீட்டிற்கு செலவிடுவது உசிதம். அதேபோல் கால வரையைறையை பின்பற்றுவது.
வேலை காலை 8 முதல் இரவு 8 வரை
8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் வரை
- வாணிபம் செய்பவர்கள் குழந்தை பெறும் வரை சற்று நேரத்தை தாங்களாகவே திட்டமிட்டு செலவு செய்தால் மிகவும் சரியானதே.
- பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் பணத்தை நோக்கியே வாழ்க்கைய கழிப்பது நியாயமற்றது. வாழ்க்கை என்பது பணம் மட்டும் அல்ல வேறு பலவும் உள்ளன.
வாழ்க்கையை அனைத்துக் கோணங்களிலும், பார்த்தாலும் மட்டும் நாமும் நம்மை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக பிரச்சனை இல்லாமல் வாழ முடியும். பலரின் சிந்தனையானது எப்படி இருக்கின்றது என்றால் மதிப்பு என்பது செல்வத்தின் அடிப்டையில்தான்.
சரி ரொம்ப நேரமாக தலைப்பை பற்றியே படித்து கலைத்துவிட்டதால் இதோ ஒரு சின்ன சின்ன நகைச்சுவைகள்
கணவன்: நமக்கு இப்ப தான் கல்யாணம் முடிந்தது அல்லவா. இப்போதுநான் உன்னிடம் உள்ள சில குறைகளை கூறட்டுமா? என்றார்.
மனைவி: (பதிலளித்தார்): அதைப் பற்றி நீங்கள் கலைப்பட வேண்டாம். உண்மையை சொல்லப் போனால் அவைகள் தான் என்னை உங்களிடம் சேர்த்து வைக்க உதவி விட்டது என்பதை நினைத்து நான்தான் கவலைப்பட வேண்டும் என்றார்.
ஹோட்டலக்கு சாப்பிட வந்த ஒருவர் வினவினார்.
வினா: என்னப்பா இது நீ எனக்கு வைத்த கோழியில் ஒரு கால் பெரியதாகவும் மற்றொரு கால் சிறியதாகவும் உள்ளதே ஏன்?
பணிபுரிபவர் (பதிலளித்தார்) : சார் நீங்க கோழியை சாப்பிட வந்தீர்களா? இல்லை கோழியுடன் நடனமாட வந்தீர்களா? என்றார்.
உலகம் எப்படி உள்ளது. அதுசரி நாம் நம் பணியை தொடருவோம். பணம் இருந்தால் தான் அனைவரும் நம்மை மதிப்பர் என்பதை ஆழ்மனதில் பதிய வைத்து கொண்டுள்ளோம். கார், பைக், பங்களா, நகை மேலும் பல இருந்து விட்டால் நாம் வசதியானவர்கள் என்னும் பெயரை வேண்டுமானாலும் பெறலாமே தவிர அவை பல நேரங்களில் பலவிதமான பிரச்சனைகளையும் தருவதை மறந்துவிடக்கூடாது. இவைகளை இல்லாது வாழும் மனிதர்கள் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். எதவுமே கட்டாயம் இல்லையே, நமக்குத் தேவையெனில், உபயோகமுள்ளதாகவும் தோன்றினால் தப்பில்லை. இந்த பணத்தின் மீதுள்ள பற்றானது நம்மை பல விதமான தவறைவிளைவிக்க கூடிய செயல்களை தூண்டவும் செய்கிறது. அதுவும் இன்றைய இளைஞர்களிடத்தில் இந்த விளைவை காணமுடிகிறது. வேலை செய்யாமல் முயற்சி சொள்ளாமல் ஒரே இரவில் பணக்காரர்கள் ஆக வேண்டம் என்ற அவா. எப்படியெல்லாம் சுலபமாக பணம்பெற முடியும் என்ற வழிகளை தேடியே ஆர்வம் செல்கிறது. இவர்களுக்கு உதவுவதற்கு டி.வியும் சினிமாவும் புத்தம் புதுமையான வழிகளை காட்டுகிறது. இரண்டும் கெட்ட வயதில் எது சரி எது தவறு, எது உண்மை எந்த மாயை என்பதை அறியும் அளவிற்கு பக்குவம் இருக்காது. மேலும் எந்த வகையில் சந்தோஷமும் மற்றவர்கள் போல் வாழ ஏதேனும் வழியை கண்டாலோ அதை அப்படியே கண்களை மூடி நம்பி அதில் செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.
அன்றைய நிலை இன்றைய நிலைக்கு வர பல மாற்றங்கள் பெற்றுள்ளது. அவைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்பது பலரின் குழப்பம். எதற்குமே நாம் குழப்பமடையாமல் இருக ஒரே வழ ‘எதையுமே பல கோணங்களிலும் ஆராய்ந்து பார்ப்பது தான்’ முதலில் எவை ஒன்றை எடுத்து கொண்டாலும் அதில் உள்ள நல்லவையையும் கெட்டவையையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். பிறகு அவை நமக்கு தேவையெனில் அதை ஏற்றுக் கொள்ளலாமே. அவசரமே வேண்டாம் கொஞ்சம்காலம் கடந்தாலும் தப்பில்லை. ஆனால் நாம் செய்வது சரியாகே இருக்கும் என்பதை முழுமையாக நம்ப வேண்டும்.
நம் நாடானது ‘வந்தோரை வாழ வைக்கும் பூமி’ ‘ஆன்மீகத்தின் குரு’ ‘பண்பின் வெளிப்பாடு’ என்ற பல பெயரைப் பெற்றுள்ள நாடு. எனவே எதைச் செய்தாலும் சுயநலமற்று பொது நலத்தோடு செய்வோம். பழையதிலும் சில (அல்லது) பல நல்ல விஷயங்கள் உள்ளது அதை மறுக்க வேண்டாமே. முழுமையாக பின்பற்றாவிடினும் ஒரு பகுதியேனும் பின்பற்றி பயன் பெறுவோம். நவீன உலகத்தில் என்னென்னவையோ வந்துவிட்டது. இதில் நம்முடைய பங்கானது பழையதையும் புதியதையும் சரி சமமாக பாவித்து வாழ முற்படலாம்.
- தொடரும்
- None Found







Dear Madam / Sir,
Your article is excellent. I am working woman (physically challenged). I am motivating my friends and relatives. Yes, I am motivating my son, my brothers’ and sisters’s children by week ends.
I like this informative website!
Thanks and with regards,
Savithri
Hi mam,
How r u. I’m nethaji from try. Mam Ur article is very great. Its very useful to everybody. Please continue for ur service.
Wish u all the best mam.
Tks & regds.
Nethaji.A
9965110110
WE WANT YOU TO WRITE AGAIN.