![]() |
Author: ஆசிரியர் குழு
|
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்க் கூறும் நல்லுலகம் மட்டுமின்றி
வடதிசையும் சென்றிட்டே
தவித்த வாய்க்கு தண்ணீரும்
செழித்த வேளாண்மைக்கு – ஆழ்துளையால்
நிலத்தடிநீரை வெளிக்கொணரும்
தொழில்நுட்ப உழைப்பாளர்களைத்
தந்திட்ட திருநகரம் – பேர் புகழும்
திருச்செங்கோடு.
அமுதூறும் தேவாரம் பாடியோரால்
கொடிமாட செங்குன்றம் – எனும்
பேரால் புகழ்பாடல் பெற்றிட்ட
திருத்தளம்தான் திருச்செங்கோடு
மானத்தை மறைப்பதற்கு
விலங்கினின்றும் பிறஉயிரினின்றும்
வேறுபடுத்தி நிற்பதற்கும் கைத்தறி
ஆடைதந்து அழகு மீட்டும்
அணியான திருநகரே திருச்செங்கோடு
பூம்புகார் தனைவிட்டு ஊழ்வினையால்
பொருள்தேட பாண்டிமண்டலம் சென்றே
ஆவிநிகர் கணவனாம் கோவலனை
கொலை களத்தில் பறிகொடுத்த
கொடுஞ்சினத்தால் மாமதுரை மூதுரை
சினத்தீயால் எரித்திட்ட
கொங்கச்செல்வி குடமலையாட்டி
தென்தமிழ் பாவை – பொற்புடைச் செல்வி
கற்புக்கரசி கண்ணகியாள்
பூவுலகம் நீங்கி – விண்ணுலகம் புறப்பட்ட
புண்ணிய பூமியாம்
திருச்செங்கோடு பெற்றெடுத்த
உயர்ந்த மனிதன்
உழைப்பால், தான் உயர்ந்து – பிறரையும்
வாழவைக்கும் நல்மனிதர்
ஜான்சன்ஸ் நடராஜன்
அரசு பள்ளியிலே இறுதிவகுப்பு முடித்து
வட்டாட்சியர் அலுவலகத்தில் நாட்கூலி பணிசெய்து
சுகாதார ஆய்வாளர் பயிற்சிபெற்று
ஆய்வாளர் பணியேற்றவர்.
அரசு பணித் துறந்து – தொழில்
துறையில் தடம் பதித்தவர்.
வறிய நெசவாளர் குடும்பத்து பிள்ளை
தந்தை தன் உழைப்பால் சிலோன் வரை துணிவணிகம்
இருப்பினும் வறுமைதான் மிச்சம்.
வறுமையை வென்றிட்டே
வாழ்வாங்கு வாழுதற்கு
தொழில் துறையை தேர்ந்திட்டார்
அரசு பணியகன்று
தன்னம்பிக்கை மிகு கொண்டே
தாமே தனியாக தொழில் முனைவோரானார்.
திட்டமிட்ட தம் உழைப்பால்
தளராத நன்முயற்சி மேலீட்டால்
உயரமுடியும் என்றேஉலகுக்கு
காட்டி நின்றதிறனாளர்!
மாந்த நேயம் மலர்கின்ற- நல்
இதயம் படைத்திட்ட பண்பாளர்.
தொழிலதிபர் என்றிட்ட நிலையிலுமே
தொழிலாளர் நலம்பேணும் தூய உள்ளம்.
சமுதாயம் நற்சிந்தை பெற்றிடவே
நற்கல்வி தேவையென உணர்ந்ததாலே
கல்வி நிலையங்கள் படைத்திட்ட கல்வியாளர்.
தொழில் தூய்மை மேலாண்மை
சிறந்தது நிற்க
மேலாண்மை பயிற்சி தரும்
நிலைய இயக்குநர்
நெசவுத் தொழில் தன்னில்
நவீன புதுமைகளை படைத்திட்ட படைப்பாளி
தரான துணிகளிலே தனிமுத்திரையைத்
தந்திட்ட நல் ஏற்றுமதியாளர்.
பண்நாட்டு வித்தகத்தை தம் தொழில்
பாங்காக பதித்திட்ட விஞ்ஞானி
நன் மக்கட்பேறுதனை பெற்றிட்டே
நாளும் தொழில் வளர
அவர்தம் மக்கள் துணை நிற்க – இன்று
கல்லூரி குழுத்தலைவராக
மேலாண்மை பயிற்சி பள்ளி நிறுவனராக
மொத்தத்தில் சொல்வதெனில்
குழந்தைகள் பள்ளி முதல் கல்லூரி வரை
நிறுவனர் தலைவரென பல்வேறு பொறுப்புகள்
பெரியார் பல்கலைக்கழக செனட்
ரோட்டரி இன்னர் வீல்
செங்குந்தர் கல்வி அறக்கட்டளை
பல்வேறு பணிகளில்
தொழில் துறையில் பொது வாழ்வில்
விடாமுயற்சியால் பெற்றிட்ட வெற்றிகளை
தன்னம்பிக்கை நேர்காணல் வழி நின்று பகிர்ந்து கொள்கின்றார்
ஜான்சன்ஸ் நடராஜன் அவர்கள்.
- கவிஞர் முல்லை.
உங்கள் பெயர் நடராஜன். உங்கள் நிறுவனத்தின் பெயர் ஜான்சன்ஸ். இதை பற்றி கூறுங்களேன்…?
நான் படிக்கின்றகாலத்தில் சிறுவயதில் என்பள்ளி நண்பர்கள் என்னை ‘ஜான்’ என்றேஅழைப்பார்கள். நாளடைவில் அப்பபெயரே நண்பர்கள் மத்தியில் பிரபலமானது.
நான் அரசு பணியிலிருந்து விலகி சகோதரர்களுடன் இணைந்து ஜவுளித் தொழில் செய்தேன்.
பிறகு தனியே தொழில் தொடங்கும் போது எங்கள் நிறுவனத்திற்கு பெயர் வைக்கும்போது நண்பர்களால் அழைக்கப்பட்ட ஜான் என்றபெயருடன் சன்ஸ் (Sons) சேர்த்து, ஜான்சன்ஸ் என்றபெயர் வைத்தோம். எனக்கு இரண்டு மகன்கள்.
தங்கள் இளமை காலம் பற்றி…
அன்று ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் திருச்செங்கோட்டில் (இன்று நாமக்கல் மாவட்டம்) 1934-ல் பிறந்தேன். ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது எங்கள் குடும்பம் தொழில் நிமித்தமாக சிலோன் சென்றுவிட்டோம். 5,6 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திரும்பிவிட்டோம். (1941, 42 களில்)
அப்போது இரண்டாம் உலகப்போர் மூண்டதால் திரும்பி வந்து திருச்செங்கோட்டில் தொழில் செய்த நிலையிலும், வறுமையில்தான் எங்கள் குடும்பம் இருந்தது.
தாங்கள் படித்ததெல்லாம்…
நான் படித்ததெல்லாம் திருச்செங்கோடு அரசு பள்ளிகளில்தான் 1952-ல் எஸ்.எஸ்.எல்.சி. முடித்தேன். மேற்கொண்டு படிக்க குடும்ப பொருளாதாரம் இடம் தராததால் ஒரு மருந்துக்கடையில் சம்பளம் இல்லாமல் வேலையில் சேர்ந்தேன். சம்பளம் இல்லாமல் என்றால் தொழில் கற்கும் எண்ணத்துடன் அங்கு வேலைக்கு சென்றேன். வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவரால் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் நாள் கூலி வேலைக்கு பணியில் அமர்த்தப்பட்டேன். ஒரு நாளைக்கு சம்பளம் இரண்டு ரூபாய். இப்படி ஒன்றரை ஆண்டுகள் அதில் வேலை செய்தேன்.
தொழில் துறைக்கு எப்படி வந்தீர்கள் என்பதை விளக்கமாக சொல்லுங்களேன்?
- தொடரும்…
- None Found







vey useful web site